பள்ளத்தால் முதியவர் உயிரிழந்தாரா? மாரடைப்பா? வெளியானது சிசிடிவி காட்சி!

பள்ளத்தால் முதியவர் உயிரிழந்தாரா? மாரடைப்பா? வெளியானது சிசிடிவி காட்சி!
பள்ளத்தால் முதியவர் உயிரிழந்தாரா? மாரடைப்பா? வெளியானது சிசிடிவி காட்சி!

கோடம்பாக்கத்தில் பள்ளம் நிறைந்த சாலையில் முதியவர் ஒருவர் தவறி விழுந்து உயிரிழந்த நிலையில் அதுகுறித்த சிசிடிவி காட்சி தற்போது வெளியாகியுள்ளது.

சென்னை கோடம்பாக்கத்தைச் சேர்ந்தவர் நரசிம்மன். இவர் கார் ஓட்டுநராக இருந்து வந்தார். இன்று பணிக்கு செல்வதற்காக கோடம்பாக்கம் மேம்பாலத்தின் அருகே நடந்து சென்று கொண்டிருந்தார். அங்கு கழிவுநீரும் மழைநீரும் சாலையோரமாக தேங்கியிருந்தது. அதேபோல் பாதாள சாக்கடையும் பாதி திறந்த நிலையில் இருந்தது.

இதற்கிடையே நடந்து வந்த நரசிம்மன் தவறி கீழே விழுந்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இதுதொடர்பாக நுங்கம்பாக்கம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். அலட்சியம் காரணமாகவே இந்த சம்பவம் நிகழ்ந்திருப்பதாகவும் சாலையில் சாக்கடையை சரியாக மூடாததும் இதற்கு காரணம் எனவும் குற்றச்சாட்டு எழுந்தது.

இதையடுத்து மழைநீர் பள்ளத்தாலோ, கழிவுநீர் பள்ளத்தாலோ ஓட்டுநர் நரசிம்மன் இறக்கவில்லை எனவும் அவரது மரணத்திற்கு வேறு காரணம் இருக்கக்கூடும் எனவும் மாநகராட்சி தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இந்நிலையில் அவர் உயிரிழந்த இடத்தில் இருந்த சிசிடிவி காட்சியை காவல்துறை வெளியிட்டுள்ளது.

அதில், நடந்து வரும் முதியவர், குறிப்பிட்ட பள்ளத்தின் அருகே சற்று நேரம் நின்று பின்னர் அப்படியே திடீரென கீழே விழுகிறார். இதைப்பார்த்த பின்னால் நடந்து வந்ததவர் உடனடியாக அவரை தூக்குகிறார். ஆனாலும் அவர் நெஞ்சுவலி காரணமாக உயிரிழந்தாரா அல்லது வேறு காரணமா என்பது குறித்து போலீசார் விளக்கம் அளிக்கவில்லை. பிரேத பரிசோதனை அறிக்கை வந்தபிறகே உண்மையான காரணம் தெரியும் எனத் தெரிவித்துள்ளனர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com