\
பட்டப்பகலில் இளைஞர் மீது கொலைவெறித் தாக்குதல் - வீடியோ

பட்டப்பகலில் இளைஞர் மீது கொலைவெறித் தாக்குதல் - வீடியோ

பட்டப்பகலில் இளைஞர் மீது கொலைவெறித் தாக்குதல் - வீடியோ
Published on

சென்னை பாரிமுனை அருகே மக்கள் நடமாட்டம் மிகுந்த சாலையில், இளைஞர் ஒருவர் ஓட ஓட விரட்டி தாக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சைதாப்பேட்டையைச் சேர்ந்த முகமது சுல்தான், பாரிமுனையில் உள்ள என்.எஸ்.சி போஸ் சாலையில் நின்று கொண்டிருந்தார். அங்கு ஆட்டோவில் அமர்ந்திருந்த இருவர் கஞ்சா புகைத்துக் கொண்டிருந்ததாக தெரிகிறது. அதைக் கண்ட சுல்தான், அருகில் இருந்த போக்குவரத்து காவலரிடம் புகார் கூறியுள்ளார். அதைக் கண்ட இருவரும், சுல்தானை ஓட ஓட விரட்டிச் சென்று கடுமையாக தாக்கினர். காண்பவர்களை பதற்றத்திற்குள்ளாக்கும் இந்த காட்சி அங்கிருந்த சிசிடிவி கேமராவில் பதிவானது. 

கொஞ்சம் கூட அச்சம் கொள்ளாத அந்த நபர்கள், பொதுமக்கள் முன்னிலையில் தாக்குதல் சம்பவத்தில் ஈடுபட்டனர்.‌ அதுகுறித்து விசாரணை நடத்திய காவல்துறையினர், ராபர்ட், தீனா என்ற இருவரை கைது செய்தனர். அவர்கள் மீது கொலை மிரட்டல் உள்ளிட்ட 6 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com