ரயிலில் போதை ஆசாமியால் பெண் காவலருக்கு கத்திக்குத்து - தப்பித்து ஓடும் சிசிடிவி காட்சிகள்!

ரயிலில் போதை ஆசாமியால் பெண் காவலருக்கு கத்திக்குத்து - தப்பித்து ஓடும் சிசிடிவி காட்சிகள்!

ரயிலில் போதை ஆசாமியால் பெண் காவலருக்கு கத்திக்குத்து - தப்பித்து ஓடும் சிசிடிவி காட்சிகள்!
Published on

நேற்று முன்தினம் இரவு போதையிலிருந்த ஒருவரால் மின்சார ரயிலில் கத்தியால் தாக்கப்பட்ட பெண் காவலர், தப்பித்து ஓடிவரும் சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளன.

சென்னை கடற்கரை ரயில் நிலையத்தில் ரயில்வே பாதுகாப்பு படை காவலராக பணிபுரிந்து வரும் வட மாநிலத்தை சேர்ந்த பெண் காவலர் ஆசிர்வா. பெண் காவலர் ஆசிர்வாவை, நேற்று முன்தினம் இரவு போதையில் பயணித்த ஒருவர் கத்தியால் கடுமையாக தாக்கியிருந்தர். அப்பெண் காவலர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தபோது இச்சம்பவம் நடந்திருந்தது.

சென்னை கடற்கரையில் இருந்து தாம்பரம் நோக்கி செல்லக்கூடிய ரயிலில் பெண்கள் அமரும் பெட்டியில் பயணம் செய்திருக்கிறார். அப்போது அப்பெட்டியில் மதுபோதையில் ஆணொருவர் ஏறியிருந்திருக்கிறார். இதை பெண் காவலர் ஆசிர்வா கண்டித்துள்ளார். இதில் ஆத்திரமடைந்த அந்த நபர், தான் மறைத்து வைத்திருந்த கத்தியை வைத்து ஆசிர்வாவின் கழுத்து மற்றும் மார்பு பகுதியில் சரமாரியாக குத்தியிருக்கிறார்.

இதில் படுகாயம் அடைந்த அவர், மீட்கப்பட்டு பெரம்பூர் ரயில்வே மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். காவலரை கத்தியால் குத்திய நபரை ரயில்வே போலீசார் தேடி வருகிறார்கள். இது தொடர்பாக எழும்பூர் ரயில்வே போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்.

இந்நிலையில் அப்பெண் காவலர் தப்பித்து ஓடிவரும் சிசிடிவி காட்சி தற்போது வெளியாகியுள்ளது. பெண் காவலர்களின் பாதுகாப்பு குறித்த அச்சம் இதனால் அதிகரித்துள்ளது. காவலருக்கே பாதுகாப்பு இல்லாமல் இருக்கும் சூழல், மக்களிடையே அதிர்வலைகளை உருவாக்கியுள்ளது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com