\
சிபிஎஸ்இ தேர்வு: தேசிய அளவில் 5ஆம் இடம் பிடித்த காரைக்குடி மாணவிக்கு ஆசிரியர்கள் பாராட்டு

சிபிஎஸ்இ தேர்வு: தேசிய அளவில் 5ஆம் இடம் பிடித்த காரைக்குடி மாணவிக்கு ஆசிரியர்கள் பாராட்டு

சிபிஎஸ்இ தேர்வு: தேசிய அளவில் 5ஆம் இடம் பிடித்த காரைக்குடி மாணவிக்கு ஆசிரியர்கள் பாராட்டு
Published on

சிபிஎஸ்இ தேர்வில் தேசிய அளவில் 5 வது இடம் பெற்ற காரைக்குடியைச் சேர்ந்த தனியார் பள்ளி மாணவியை ஆசிரியர்கள் பாராட்டினர்.

நடந்து முடிந்த சிபிஎஸ்இ தேர்வில் சிவகங்கை மாவட்டம் காரைக்குடி அருகே உள்ள மானகிரி தனியார் பள்ளியில் பயின்று CBSE தேர்வில் ஸ்ரீ செந்தூரநாயகி என்ற மாணவி மாவட்ட அளவில் முதல் இடமும், தேசிய அளவில் 5-ஆம் இடமும் பெற்று தேர்ச்சி பெற்றுள்ளார். சிறப்பான முறையில் தேர்ச்சி பெற்ற மாணவி செந்தூர நாயகிக்கு பள்ளியில் இன்று பாராட்டு விழா நடைபெற்றது.

இதில், பள்ளியின் தாளாளர் குமரேசன், மற்றும் ஆசிரியர், ஆசிரியைகள் இனிப்பு வழங்கி பாராட்டு தெரிவித்தனர். மேலும் இந்த மாணவி அமெரிக்காவில் உள்ள டிரினிட்டி இசைக் கல்லூரியில் 5 இசை கருவிகளில் தேர்ச்சி பெற்றது மட்டுமல்லாமல், IELT ஆங்கிலத் திறன் தேர்விலும் வெற்றி பெற்றுள்ளார் என்பது குறிப்பிடதக்கது.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com