\
வாட்ஸ் அப் குழுவில் ஆபாச படம் : சென்னையில் சிபிஐ சோதனை 

வாட்ஸ் அப் குழுவில் ஆபாச படம் : சென்னையில் சிபிஐ சோதனை 

வாட்ஸ் அப் குழுவில் ஆபாச படம் : சென்னையில் சிபிஐ சோதனை 
Published on

வாட்ஸ் அப் குழுவில் குழந்தைகளின் ஆபாச வீடியோக்களை பரப்பிய விவகாரத்தில் சிபிஐ அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். 

சமூக வலைதளங்களில் குழந்தைகளின் ஆபாச வீடியோ பகிரப்படுவது தொடர்பாக டெல்லி, காசியாபாத், ஃபரிதாபாத், மேற்குவங்கம், ஜெய்ப்பூர் ஆகிய இடங்களில் சிபிஐ அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். 

அதன் தொடர்ச்சியாக சென்னையிலும் சிபிஐ அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். சென்னையை சேர்ந்த வினோத் கண்ணன், கோஷிமா ஆகியோரின் வீடுகளில் சிபிஐ சோதனை நடத்தி வருகிறது. 

சில நாட்களுக்கு முன்பு சமூக வலைதளங்களில் சிறார் ஆபாச வீடியோக்களை பரப்பிய கேரளாவை சேர்ந்த 12 பேரை போலீசார் கைது செய்தது குறிப்பிடத்தக்கது. 

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com