குட்கா விவகாரம் : தமிழக தேர்தல் டிஜிபியிடம் விசாரணை

குட்கா விவகாரம் : தமிழக தேர்தல் டிஜிபியிடம் விசாரணை
குட்கா விவகாரம் : தமிழக தேர்தல் டிஜிபியிடம் விசாரணை

குட்கா லஞ்ச விவகாரம் தொடர்பாக தமிழக தேர்தல் டிஜிபி அசுதோஷ் சுக்லாவிடம் சிபிஐ அதிகாரிகள் விசாரணை நடத்தினர்.

தமிழகத்தில் தடை செய்யப்பட்ட குட்கா உள்ளிட்ட புகையிலை பொருள்கள் விற்பனை செய்யப்பட்டதாகவும், அதற்காக அமைச்சர்கள் மற்றும் மத்திய, மாநில அரசு அதிகாரிகள் சிலருக்கு லஞ்சம் தரப்பட்டதாகவும் புகார் எழுந்தது. இதுதொடர்பாக கடந்த மே மாதம் வழக்குப்பதிவு செய்த சிபிஐ, குட்கா ஆலை அதிபர்கள் மாதவ ராவ், உமாசங்கர் குப்தா, சீனிவாச ராவ் மற்றும் மத்திய கலால்துறை அதிகாரி பாண்டியன், உணவு பாதுகாப்பு அதிகாரி செந்தில் முருகன், சுகாதாரத்துறை ஆய்வாளர் சிவக்குமார் ஆகியோரை கைது செய்தது. மேலும் குட்கா போதைப்பொருட்கள் விற்பனை தொடர்பான வழக்கை சிபிஐ விசாரித்து வருகிறது. 

இந்நிலையில், தமிழக தேர்தல் டிஜிபியாக உள்ள அசுதோஷ் சுக்லாவிடம் டெல்லி சிபிஐ அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டனர். குட்கா விவகாரம் தொடர்பாக வருமான வரித்துறை கடந்த 2016-ம் ஆண்டில் கைப்பற்றிய டைரியில், அப்போதைய சென்னை மாநகர காவல் ஆணையராக இருந்த அசுதோஷ் சுக்லா, குட்கா தயாரிப்பாளர்களிடம் இருந்து லஞ்சம் பெற்றதாக குறிப்பு இருந்தது. இது தொடர்பாக விளக்கம் அளிக்கும்படி கடந்த மாதம் சம்மன் அனுப்பியும் அவர் ஆஜராகவில்லை. நேரில் ஆஜராகவில்லை எனில், சட்டரீதியிலான நடவடிக்கை எடுக்கப்படும் என சிபிஐ கூறியிருந்தது. இந்நிலையில், சென்னை சிபிஐ அலுவலகத்தில் விசாரணைக்காக அசுதோஷ் சுக்லா இன்று ஆஜரானார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com