“முகிலனை தொடர்ந்து தேடுகிறோம்” - சிபிசிஐடி

“முகிலனை தொடர்ந்து தேடுகிறோம்” - சிபிசிஐடி
 “முகிலனை தொடர்ந்து தேடுகிறோம்” - சிபிசிஐடி

சுற்றுச்சூழல் செயற்பாட்டாளர் முகிலன் மாயமான விவகாரத்தில் 9 பக்க விசாரணை அறிக்கையை சிபிசிஐடி உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ளது.

சமூக ஆர்வலர் முகிலன் கடந்த பிப்ரவரி மாதம் காணமல் போனார். அவரைக் கண்டுபிடித்து தர வேண்டும் என சென்னை
உயர்நீதிமன்றத்தில் ஆட்கொணர்வு மனுத் தாக்கல் செய்யப்பட்டது. முகிலனை மீட்கக்கோரி ஹென்றி திபேன் என்பவர் மனுவைத் தாக்கல் செய்தார். 

இதனிடையே முகிலனை விரைவாக கண்டுபிடிக்க வேண்டும் எனவும், அதற்கு தமிழக அரசை வலியுறுத்தும் விதமாகவும்  'முகிலனை தேடி' என்கிற முழக்கத்துடன் முகிலன் மனைவி பூங்கொடி தலைமையில் ஈரோடு மாவட்டம் சென்னிமலையிலிருந்து ஒரு குழுவும், தூத்துக்குடி துப்பாக்கிச்சூட்டில் பலியான குடும்பத்தினருக்கு நீதிக்கேட்டும் , முகிலனை தேடியும் மனித உரிமை ஆர்வலர் பாத்திமா தலைமையில் தூத்துக்குடியிலிருந்து ஒரு குழுவும் சென்னை நோக்கி பயணத்தை தொடங்கியுள்ளது. 

முகிலன் காணமல் போன வழக்கை சிபிசிஐடி விசாரித்து வருகிறது. இந்நிலையில் இன்று இந்த வழக்கு உயர்நீதிமன்றத்தில்
விசாரணைக்கு வந்தது. அப்போது, சுற்றுச்சூழல் செயற்பாட்டாளர் முகிலன் மாயமான விவகாரத்தில் 9 பக்க விசாரணை அறிக்கையை சிபிசிஐடி உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்தது. 

அதில், டிஎஸ்பி தலைமையில் 17 தனிப்படைகள் அமைத்து 251 சாட்சிகளிடம் விசாரணை நடைபெற்றிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ரயில் நிலையத்தில் சிசிடிவி காட்சிகள் சேகரித்திருப்பதாகவும் விசாரணை சரியான பாதையில் செல்வதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும்  இந்த வழக்கு ஏப்ரல் 8 ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. 

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com