தலைமைக் காவலர் முத்து ராஜை தேடப்படும் நபராக அறிவித்தது சிபிசிஐடி

தலைமைக் காவலர் முத்து ராஜை தேடப்படும் நபராக அறிவித்தது சிபிசிஐடி
தலைமைக் காவலர் முத்து ராஜை தேடப்படும் நபராக அறிவித்தது சிபிசிஐடி

சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கில் தூத்துக்குடி கஸ்டடியில் இருந்து தப்பிய தலைமைக் காவலர் முத்து ராஜை சிபிசிஐடி காவல்துறை தேடப்படும் நபராக அறிவித்துள்ளது

சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கை உயர்நீதிமன்ற மதுரைக் கிளை நீதிபதிகள் பி.என் பிரகாஷ், புகழேந்தி ஆகியோர் அடங்கிய அமர்வு விசாரணை செய்து வருகிறது. அதன்படி இந்த வழக்கை சிபிஐ விசாரிக்கும் வரை சிபிசிஐடி விசாரிக்க வேண்டும் எனவும் சிறிதளவும் தாமதம் ஏற்படுத்தக்கூடாது எனவும் உத்தரவு பிறப்பித்திருந்தது.

அதன்படி விசாரணையைத் தொடங்கிய சிபிசிஐடி காவல்துறையினர் ஜெயராஜ் வீடு, கடை ஆகிய இடங்களில் ஆய்வு செய்து பல்வேறு தரப்பினரிடமும் விசாரணை செய்தனர். மேலும் இந்த வழக்கைக் கொலை வழக்காகப் பதிவு செய்து காவல் உதவி ஆய்வாளர் ரகு கணேஷை கைது செய்தனர். பின்னர், தலைமறைவாக இருந்த உதவிக் காவல் ஆய்வாளர் பாலகிருஷ்ணன், தலைமைக் காவலர் முருகன், காவலர் முத்து ராஜ் ஆகியோரையும் சிபிசிஐடி கைது செய்தது. இதனைத் தொடர்ந்து நள்ளிரவில் சேஸிங் செய்து காவல் ஆய்வாளர் ஸ்ரீதரை சிபிசிஐடி கைது செய்தது. அவர் மீது வழக்குப்பதிவும் செய்யப்பட்டுள்ளது.

இதனிடையே உயிரிழந்தவர்களை போலீசார் லத்தியால் தாக்கியதாக சாத்தான்குளம் தலைமைப் பெண் காவலர் ரேவதி என்பவர் மாஜிஸ்திரேட்டிடம் சாட்சியம் அளித்தார். இதனையடுத்து அவரது குடும்பத்தினருக்கு நீதிமன்ற உத்தரவின் பேரில் பாதுகாப்பு அளிக்கப்பட்டுள்ளது. இதனிடையே தூத்துக்குடி கஸ்டடியில் இருந்த தலைமைக் காவலர் முத்து ராஜ் தலைமறைவானார். இந்நிலையில் முத்து ராஜை தற்போது சிபிசிஐடி தேடப்படும் நபராக அறிவித்துள்ளது.

இது குறித்துப் பேசிய ஐ.ஜி சங்கர் “ சாத்தான்குளம் தந்தை, மகன் உயிரிழந்த வழக்கில் சாத்தான்குளம் காவல் நிலைய காவலர் முத்து ராஜ் இரண்டு நாட்களுக்குள் பிடிபடுவார். அவரைத் தேடி வருகிறோம். சம்பவம் நடந்த அன்று பணியாற்றிய பிரண்ட்ஸ் ஆஃப் போலீசாரிடம் விசாரணை நடத்தப்படும். கண்காணிப்பு கேமராக்களில் பதிவான சில பதிவுகள் கிடைத்துள்ளது. சிபிசிஐடி நியாயமாக விசாரித்து வருகிறது. முத்து ராஜை கைது செய்து தனியை வைத்துள்ளதாகக் கூறப்படும் தகவலில் உண்மையில்லை. அப்படி ஏன் செய்ய வேண்டும்? இந்த வழக்கில் எந்த அரசியல் தலையீடு இல்லை” எனக் கூறியுள்ளார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com