வேங்கை வயல் விவகாரம்
வேங்கை வயல் விவகாரம்முகநூல்

வேங்கை வயல் விவகாரம்: குற்றவாளிகள் கண்டறியப்பட்டது குறித்து சிபிசிஐடி விளக்கம்!

வேங்கைவயலில் குடிநீரில் மனிதக்கழிவு கலக்கப்பட்டது தொடர்பான வழக்கின் விசாணையின்போது, புகார்தாரர் மற்றும் அவரது உறவினர்கள் உட்பட 397 சாட்சிகள் விசாரிக்கப்பட்டுள்ளதாக சிபிசிஐடி தெரிவித்துள்ளது.
Published on

வேங்கைவயலில் குடிநீரில் மனிதக்கழிவு கலக்கப்பட்ட விவகாரத்தில், குற்றவாளிகள் கண்டறியப்பட்டது குறித்து சிபிசிஐடி விளக்கம் அளித்துள்ளது.

வேங்கைவயலில் குடிநீரில் மனிதக்கழிவு கலக்கப்பட்டது தொடர்பான வழக்கின் விசாணையின்போது, புகார்தாரர் மற்றும் அவரது உறவினர்கள் உட்பட 397 சாட்சிகள் விசாரிக்கப்பட்டுள்ளதாக சிபிசிஐடி தெரிவித்துள்ளது. 196 மொபைல் எண்கள், ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட தொலைபேசி எண்களை உள்ளடக்கிய 87 டவர்கள் பகுப்பாய்வு செய்யப்பட்டதாகவும், கிராம மக்களிடமிருந்து உயிரியல் மாதிரிகள் எடுத்து டி.என்.ஏ பகுப்பாய்வு செய்யப்பட்டதாகவும் கூறியுள்ளது.

வேங்கை வயல் விவகாரம்
சர்வதேச போதைப்பொருள் கடத்தல் தலைவனுடன் லிங்க்.. மொத்தமாக பிடிக்க சென்னை போலீஸ் Plan! உள்ளே வந்த NIA!

வேங்கைவயல் நீர்தேக்க தொட்டி பராமரிப்பு குறித்து கேள்வி எழுப்பியதற்காக, முத்துக்காடு ஊராட்சி மன்ற தலைவரின் கணவர் முத்தையா, வேங்கைவயல் காவலர் முரளிராஜின் தகப்பனார் ஜீவானந்தத்தை அவமானப்படுத்தியது விசாரணையில் தெரியவந்துள்ளதாக சிபிசிஐடி குறிப்பிட்டுள்ளது. இதற்கு பழி வாங்குவதற்காக, முரளிராஜாவால் இச்செயல் திட்டமிட்டு செயல்படுத்தப்பட்டது புலனாவதாக தெரிவித்துள்ளது.

முரளிராஜா, சுதர்ஷன், முத்தையா, முத்துக்கிருஷ்ணன் மற்றும் பலரின் கைப்பேசிகள் தடயவியல் பகுப்பாய்வு செய்யப்பட்டதாகவும், அதில் அழிக்கப்பட்ட புகைப்படங்கள் மற்றும் உரையாடல்கள் மீட்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. புகைப்படங்கள், வீடியோ ஆதாரங்கள், தடயவியல் அறிக்கை, சாட்சியங்களின் அறிக்கை, வல்லுநர்களின் கருத்துகள் ஆகியற்றை பகுப்பாய்வு செய்தபின்னர் விசாரணை முடிக்கப்பட்டு, முரளிராஜா, சுதர்ஷன், முத்துக்கிருஷ்ணன் ஆகியோர் மீது புதுக்கோட்டை சிறப்பு நீதிமன்றத்தில் இறுதி அறிக்கை தாக்கல் செய்யப்பட்டதாக, சிபிசிஐடி தனது விளக்கத்தில் கூறியுள்ளது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com