ஜல்லிக்கட்டு தொடர்பாக அதன் ஆதரவாளர்கள் தரப்பில் உச்சநீதிமன்றத்தில் 70 கேவியட் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.
ஜல்லிக்கட்டு தொடர்பாக வழக்கு உச்சநீதிமன்றத்தில் உள்ள நிலையில் ஜல்லிக்கட்டை நடத்த தமிழக அரசு நேற்று அவசர சட்டம் கொண்டு வந்தது. ஜல்லிக்கட்டுக்கு பீட்டா அமைப்பு தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வருவதால் ஜல்லிக்கட்டு விவகாரத்தில் யாரேனும் வழக்கு தொடர்ந்தால் தமிழக அரசின் கருத்தை கேட்டறியாமல் எந்த உத்தரவும் பிறப்பிக்கக் கூடாது என தமிழக அரசு ஏற்கனவே கேவியட் மனு தாக்கல் செய்துள்ளது. இந்நிலையில் தற்போது ஜல்லிக்கட்டு நடத்த எந்த இடையூறும் ஏற்படமால் இருக்க ஜல்லிக்கட்டு ஆர்வலர்களும் தங்கள் சார்பில் 70 கேவியட் மனுக்களை தாக்கல் செய்துள்ளனர்.