cauvery
cauverypt desk

காவிரி நீர் விவகாரம்: கர்நாடகாவில் போராட்டம் - காவல்துறை கட்டுப்பாட்டில் எல்லைப் பகுதிகள்!

தமிழ்நாட்டில் இருந்து கர்நாடகா செல்லும் அனைத்து இடங்களையும் முழுவதுமாக காவல்துறை தன் கட்டுப்பாட்டில் கொண்டுள்ளதாக காவல்துறை உயர் அதிகாரி தெரிவித்துள்ளார்.
Published on

காவிரி நீரை பெறுவதில், தமிழ்நாடு கர்நாடகா ஆகிய மாநிலத்திலும் போராட்டங்கள் நடைபெற்று வருகிறது. இந்நிலையில், தமிழகத்தில் இருந்து கர்நாடகா மாநிலத்திற்கு வாகனங்கள் செல்ல வேண்டாம் என்று லாரி உரிமையாளர்கள் அறிவித்த நிலையில், அங்காங்கே வாகனங்கள் பாதுகாப்பாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

Duraimurugan, DK Shivakumar
Duraimurugan, DK ShivakumarPT web

இந்நிலையில், நேற்று கர்நாடகாவில் முழு அடைப்பு போராட்டம் நடைபெற்றது. இதையடுத்து தமிழக எல்லை மாவட்டங்களில் காவல்துறையினர் தொடர்ந்து கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். கர்நாடகத்தில் இருந்து தமிழகத்திற்குள் நுழையும் அனைத்து வழிகளையும் காவல்துறை தன் கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவந்து. கண்காணித்து வருவதாக காவல்துறை உயர் அதிகாரி தெரிவித்தார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com