காவிரி நீர் விவகாரம்: 4 மாநிலங்களுக்கு மத்திய அரசு கடிதம்
காவிரி நதிநீர் விவகாரத்தில் நிபுணர் குழு அமைக்க பெயர்களை பரிந்துரைக்குமாறு தமிழகம், கர்நாடகம் உள்ளிட்ட 4 மாநிலங்களுக்கு மத்திய அரசு கடிதம் அனுப்பியுள்ளது.
நதிநீர் பங்கீடு விவகாரத்தில் உள்ள பிரச்னைகளை சரிசெய்ய இந்த நிபுணர் குழு அமைக்கப்பட உள்ளது. காவிரி பிரச்னையில கண்காணிப்புக்குழு அமைக்கலாம் என மத்திய அரசு ஏற்கனவே கூறியிருந்தது. இதற்கு கர்நாடகம் கடும் எதிர்ப்பு தெரிவித்தால் நிறுத்திவைக்கப்பட்டிருந்தது. தற்போது, நிபுணர் குழு அமைக்கப்பட உள்ளதாகவும், இந்த குழுவில் மாநிலம் சார்பிலான பிரதிநிதிகளை பரிந்துரை செய்ய வேண்டும் என்றும் தமிழகம், புதுச்சேரி, கேரளா மற்றும் கர்நாடகா மாநிலங்களுக்கு மத்திய அரசு கடிதம் அனுப்பியுள்ளது.
ஆனால், இந்த நிபுணர் குழு அமைக்கவும் கர்நாடகம் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து சிறப்பு வழக்கறிஞர் ஃபாலி நாரிமனிடம் ஆலோசிக்கவும் கர்நாடகம் திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது.