“காவிரிப் பாயும் மாவட்டங்களும்... பயன்பெறும் விளைநிலங்களும்”
மேட்டூர் அணை நிரம்பியுள்ள நிலையில், காவிரி நீர் தமிழகத்தில் 10 மாவட்டங்களில் சுமார் ஆயிரக்கணக்கான விளைநிலங்கள் பயன்பெறவுள்ளன.
கர்நாடகாவில் இருந்து திறக்கப்படும் காவிரி நீரானது ஒகேனக்கல் வழியாக மேட்டூர் அணையை வந்தடைகிறது. டெல்டா மாவட்டங்களின் முக்கிய நீராதாரமாகத் திகழும் மேட்டூர் அணையிலிருந்து திறக்கப்படும் தண்ணீரானது சேலத்திலிருந்து ஈரோடு, நாமக்கல் வழியாக கரூரை சென்றடைகிறது.
காவிரித் தண்ணீர் மூலம் ஈரோட்டில் 17ஆயிரத்து 230 ஏக்கரும், நாமக்கல் மாவட்டத்தில் 11ஆயிரத்து 327 ஏக்கர் விளைநிலங்களும் பாசன வசதி பெறுகின்றன. இதேபோல், கரூரில் 22ஆயிரத்து 500 ஏக்கரும், திருச்சியில் 2 லட்சத்து 40ஆயிரம் ஏக்கர் விளைநிலமும், புதுக்கோட்டையில் 28 ஆயிரம் ஏக்கரும் பாசன வசதி பெறுகிறது.
தஞ்சையில் 4 லட்சம் ஏக்கரும், திருவாரூரில் 4 லட்சம் ஏக்கரும், கடைமடையான நாகையில் 3 லட்சத்து 50 ஆயிரம் ஏக்கரும் பாசன வசதி பெறுகிறது. இவை மட்டுமின்றி அரியலூரில் 24 ஆயிரம் ஏக்கர் விளைநிலமும், கடலூரில் ஒரு லட்சத்து 10ஆயிரம் ஏக்கர் விளைநிலமும் காவிரி நீரை நம்பியுள்ளன.