'காவிரி தமிழகத்தின் உயிர்நீர்': சுவரில் எழுதிவிட்டு இளைஞர் தீக்குளிப்பு
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காததைக் கண்டித்து ஈரோடு மாவட்டம் சித்தோடு பகுதியைச் சேர்ந்த இளைஞர் தீக்குளித்து உயிரிழந்தார்.
ஈரோடு மாவட்டம் சித்தோடு பகுதியில் பொம்மை வியாபாரம் செய்து வருபவர் தர்மலிங்கம். காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத மத்திய அரசைக் கண்டித்தும், பிரதமரின் சென்னை வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்தும் இன்று அதிகாலை தனது வண்டியிலிருந்த பெட்ரோலை ஊற்றி தீக்குளித்தார். சம்பவத்தைக் கண்ட பொதுமக்கள் தர்மலிங்கத்தை மீட்டு ஈரோடு தலைமை அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு தர்மலிங்கத்திற்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டும் சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார். முன்னதாக, தர்மலிங்கம் சுவரின் மீது சாக்பீஸ் கொண்டு காவிரி நீர் தமிழ்நாட்டின் உயிர்நீர் என்றும், காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத பிரதமருக்கு எதிர்ப்பு தெரிவிப்பதாகவும் எழுதியிருந்தார்.