காவிரி வழக்கில் தீர்ப்பை அமல்படுத்த 4மாநில அரசுகள் ஒப்புதல் வழங்கியுள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.
காவிரி தொடர்பான அனைத்து பிரச்சனைகளையும் தீர்க்க உச்சநீதிமன்றம் வழங்கிய இறுதி தீர்ப்பை முழுமையாக செயல்படுத்துவது என தமிழகம், கர்நாடக, கேரளா, புதுச்சேரி அனைத்து மாநிலங்களும் ஒத்துக்கொண்டுள்ளது என மத்திய அரசு தெரிவித்துள்ளது .4 மாநிலங்களுடன் மத்திய நீர்வளத்துறை அமைச்சகம் 20.2.2018 அன்று ஹைதராபாத்தில் நடைபெற்ற ஆலோசனை கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டு விட்டதாக மத்திய நீர் வளத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
உச்சநீதிமன்றம் கூறியுள்ள மாநிலங்களுக்கிடையேயான நதிநீர் பங்கீட்டு சட்டப்பிரிவு 6 இன் படி திட்டம் உருவாக்கப்படும் என மத்திய நீர்வளத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.ஆனால் இந்த அறிக்கையில் காவிரி மேலாண்மை வாரியம் என்பதை மத்திய நீர்வளத்துறை அமைச்சகம் தெளிவாக குறிப்பிடவில்லை.