\
காவிரி வழக்கு; வாரியத்திற்கே அனைத்து அதிகாரமும்: உச்சநீதிமன்றம்

காவிரி வழக்கு; வாரியத்திற்கே அனைத்து அதிகாரமும்: உச்சநீதிமன்றம்

காவிரி வழக்கு; வாரியத்திற்கே அனைத்து அதிகாரமும்: உச்சநீதிமன்றம்
Published on

காவிரி அமைப்பின் பெயர் காவிரி‌ மேலாண்மை வாரியம் என இருக்க மத்திய அரசு, கர்நாடகா உட்பட அனைத்து தரப்பினரும் ஒப்புக்கொண்டுள்ளனர். ‌

காவிரி வழக்கு உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தபோது, அணைகளில் நீர் திறக்கும் அதிகாரம் காவிரி அமைப்பிடமே இருக்க வேண்டும் என்று தமிழக அரசு சார்பில் வலியுறுத்தப்பட்டது. காவிரி அமைப்பின் தலைமையகத்தை பெங்களூருவுக்கு பதில் டெல்லியில் அமைக்கவும் தமிழக அரசு கோரிக்கை விடுத்தது. காவிரி வழக்கை ஜூலை மாதத்திற்கு ஒத்தி வைக்க வேண்டும் என்று கர்நாடகா அரசு சார்பில் கோரிக்கை வைக்கப்பட்டது. இதனை ஏற்க மறுத்த உச்சநீதிமன்றம் மாநில அரசுகளின் கருத்துக்கு மத்திய அரசு நாளை பதில் அளிக்க உத்தரவிட்டுள்ளது. நீர்ப்பங்கீடு தொடர்பான அனைத்து முடிவுகளையும் வாரியமே எடுக்கும் என உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது. இறுதி முடிவை மத்திய அரசு எடுக்கும் என்ற வரைவு அறிக்கையின் அம்சத்தை நீக்க நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர். இதனையடுத்து வழக்கு விசாரணை நாளைக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com