தேர்தல் நேரத்தில் காவிரி-குண்டாறு திட்டம் என்பது மக்களை ஏமாற்றும் செயல்- ப.சிதம்பரம்

தேர்தல் நேரத்தில் காவிரி-குண்டாறு திட்டம் என்பது மக்களை ஏமாற்றும் செயல்- ப.சிதம்பரம்
தேர்தல் நேரத்தில் காவிரி-குண்டாறு திட்டம் என்பது மக்களை ஏமாற்றும் செயல்- ப.சிதம்பரம்

பாஜகவின் ஆணவத்தை அடக்க பஞ்சாப்போல் தமிழ்நாட்டிலும் பாஜகவை படுதோல்வி அடையச் செய்ய வேண்டும் என ப.சிதம்பரம் பேசினார்.

சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரியில் தேர்தல் வாக்குச்சாவடி பொறுப்பாளர்கள் கூட்டத்தில் முன்னாள் மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரம் பேசினார். அப்போது...

"மக்களை துச்சமாக நினைத்து என் கருத்துதான் நியாயம் எனக் கூறும் பிரதமரின் செயல்பாட்டை எப்படி ஏற்றுக்கொள்ள முடியும். பாஜகவின் ஆணவத்தை அடக்க பஞ்சாப்போல் தமிழ்நாட்டிலும் பாஜகவை படுதோல்வி அடையச் செய்ய வேண்டும் "என்றார்.


மேலும், “ நான்கரை ஆண்டு காலம் இல்லாமல் தேர்தல் நேரத்தில் காவிரி - குண்டாறு இணைப்பு பணிக்காக அடிக்கல் நாட்டுவது என்பது மக்களை ஏமாற்றும் செயல். ஜெயலலிதா அமைச்சரவையில் எடப்பாடி பழனிசாமி என்ற ஒருவர் இருந்தார் என்பது எனக்கே தெரியாது.

வரும் சட்டமன்றத் தேர்தலில் தமிழக மக்கள், ஒவ்வொரு தொகுதியிலும் பாஜகவை படுதோல்வி அடையச் செய்ய வேண்டும்” என்று கேட்டுக்கொண்டார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com