\
Cauvery Dispute: BY Vijayendra Sends Letter to CM Vijay
விஜய் - பி.ஒய். விஜயேந்திராPt web

காவிரி விவகாரம் | முதல்வர் விஜய்க்கு கர்நாடக பாஜக கடிதம்.. முக்கிய அம்சங்கள் என்ன?

காவிரி விவகாரம் தொடர்பாக தமிழக முதல்வர் விஜய்க்கு கர்நாடக பாஜக தலைவர் பி.ஒய். விஜயேந்திரா கடிதம் எழுதியுள்ளார்.
Published on

காவிரி நீர் தொடர்பான பிரச்னை தமிழ்நாடு - கர்நாடக இடையே பல ஆண்டுகளாக இருந்து வரும் நிலையில், சமீபத்தில் டெல்லி காவிரி நீர் ஒழுங்குபடுத்தும் கூட்டம் தமிழகத்திற்கு 15 நாட்களுக்கு தினமும் 3,500 கன அடி வீதம் நீர் திறக்க உத்தரவிட்டிருந்தது. ஆனால், குறைவான மழைப்பொழிவு காரணமாக தண்ணீர் திறக்க முடியாது என கர்நாடகா கூறியதுடன் தமிழகத்திற்கு தண்ணீர் திறக்கவில்லை. இந்தசூழலில் தான், மேகதாது விவகாரம் மற்றும் காவிர் நீர் திறப்பு குறித்து பேசுவதற்காக தமிழக முதல்வர் விஜய் கர்நாடக செல்லவிருந்த நிலையில், அங்கு நிலவி வரும் போராட்டம் மற்றும் பதற்றத்தால் அவரது பயணம் ரத்தாகியிருக்கிறது.

விஜய்
விஜய்Pt web

இந்தசூழலில் தான், கேரளா மற்றும் கர்நாடகா பகுதியில் பகுதிகளில் பெய்யும் மழைப்பொழிவு அதிகரித்திருப்பதன் காரணமாக கபினி அணைக்கு நீர்வரத்து அதிகரித்திருக்கிறது. இதனால், நேற்று 25 ஆயிரம் கன அடிநீரை தமிழகத்திற்கு கர்நாடகா திறந்து விட்டிருக்கிறது. தொடர்ந்து, கர்நாடகா அணைகள் நிரம்பும் சூழல் இருப்பதாகவும், கடையடைப்புகளை திரும்பப் பெறவேண்டும் எனவும் கன்னட அமைப்புகளை அம்மாநில முதல்வர் டி.கே. சிவக்குமார் வலியுறுத்தியிருந்தார்.

Cauvery Dispute: BY Vijayendra Sends Letter to CM Vijay
2 நாளில் அணை நிரம்பியது எப்படி? காவிரி கண்காணிப்பு குழுவின் லட்சணம் இது தானா? - பெ. சண்முகம் கேள்வி

இதற்கிடையில், கேரளா மற்றும் கர்நாடகா பகுதியில் பகுதிகளில் பெய்யும் மழைப்பொழிவு அதிகரித்திருப்பதன் காரணமாக கபினி அணைக்கு நீர்வரத்து அதிகரித்திருக்கிறது. இதனால், நேற்று 25 ஆயிரம் கன அடிநீரை தமிழகத்திற்கு கர்நாடகா திறந்து விட்டிருக்கிறது. இதையடுத்து, 2 நாட்களில் அணை நிரம்பியது எப்படி? என தமிழக அரசியல் கட்சித் தலைவர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

இந்தச்சூழலில் தான், காவிரி விவகாரம் தொடர்பாக தமிழக முதல்வர் விஜய்க்கு கர்நாடக பாஜக தலைவர் பி.ஒய். விஜயேந்திரா கடிதம் எழுதியுள்ளார்.

கபினி அணை
கபினி அணைX

இதுகுறித்து அவர் எழுதியுள்ள கடிதத்தில், ”தமிழ்நாடும் கர்நாடகமும் வரலாறு, கலாச்சாரம், வணிகம் மற்றும் மக்களிடையேயான உறவால் இணைக்கப்பட்ட சகோதர மாநிலங்கள். பெங்களூரு உள்ளிட்ட கர்நாடகத்தின் வளர்ச்சிக்கு தமிழர்கள் முக்கிய பங்களிப்பு செய்துள்ளனர். அதேபோல், தமிழ்நாட்டில் வாழும் கன்னடர்களும் மாநில வளர்ச்சியில் பங்காற்றியுள்ளனர்.

முன்னாள் கர்நாடக முதலமைச்சர் பி.எஸ். எடியூரப்பா மற்றும் முன்னாள் தமிழக முதலமைச்சர் மு. கருணாநிதி ஆகியோர் திருவள்ளுவர் சிலை விவகாரத்தை முதிர்ச்சியுடன் கையாண்டனர்.

இருமாநிலங்களும், கர்நாடக விவசாயிகள் மற்றும் பொதுமக்களின் நலனையும் கருத்தில் கொண்டு பேச்சுவார்த்தை நடத்த வேண்டும்

பெங்களூரு மற்றும் காவிரி படுகை பகுதிகளில் வாழும் கோடிக்கணக்கான மக்களின் குடிநீர் தேவைக்கு காவிரி ஆறு உயிர்நாடியாக இருக்கிறது.

போதிய மழையின்மை காரணமாக கர்நாடக விவசாயிகள் மற்றும் மக்களின் கவலைகளையும் புரிந்துகொள்ள வேண்டும்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதேபோல, மேகதாது திட்டத்தை ஒத்துழைப்பு மனப்பான்மையுடன் அணுகுமாறும், அது பெங்களூருவின் குடிநீர் தேவையை பூர்த்தி செய்வதோடு, தமிழ்நாட்டின் நியாயமான நீர் உரிமைக்கு பாதிப்பு ஏற்படுத்தாது என்றும் அக்கடிதத்தில் தெரிவித்துள்ளார்.

"காவிரி நம்மை பிரிப்பதற்குப் பதிலாக, இரு மாநில மக்களையும் இணைக்கும் பாலமாக இருக்க வேண்டும்" என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

Cauvery Dispute: BY Vijayendra Sends Letter to CM Vijay
அனைத்துக் கட்சி கூட்டம் முடியுமா? முடியாதா?.. மேகதாது விவகாரத்தில் ஸ்டாலின் கேள்வி!!
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com