காவிரி வழக்கில் தீர்ப்பு நியாயமானதா..?: உங்கள் கருத்தென்ன..?

காவிரி வழக்கில் தீர்ப்பு நியாயமானதா..?: உங்கள் கருத்தென்ன..?

காவிரி வழக்கில் தீர்ப்பு நியாயமானதா..?: உங்கள் கருத்தென்ன..?
Published on

தமிழகத்தின் பிரதான பிரச்னைகளில் ஒன்றான காவிரி நதிநீர் வழக்கில் உச்சநீதிமன்றம் இன்று தீர்ப்பு வழங்கியுள்ளது.

காவிரி நதிநீர்ப் பங்கீடு தொடர்பாக 2007-ம் ஆண்டு காவிரி நடுவர் மன்றம் அளித்த இறுதித் தீர்ப்பை எதிர்த்து தமிழகம், கர்நாடகம், கேரளம், புதுச்சேரி ஆகிய மாநிலங்கள் உச்சநீதிமன்றத்தில் மனுக்கள் தாக்கல் செய்தன. வழக்கின் அனைத்து கட்ட  விசாரணைகளும் நிறைவடைந்து இன்று தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

அதன்படி,  காவிரி நதி நீரை எந்த மாநிலமும் உரிமை கொண்டாட முடியாது என உச்சநீதிமன்ற நீதிபதிகள் தெரிவித்தனர். மேலும் காவிரியில் தமிழகத்திற்கு 177.25 டிஎம்எசி தண்ணீரை ஒதுக்கீடு செய்ய உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கடந்த 2007-ம் ஆண்டு காவிரி நடுவர் மன்றம், 192 டிஎம்சி தண்ணீரை தமிழகத்திற்கு வழங்க உத்தரவிட்ட நிலையில் உச்சநீதிமன்றம் அதனை குறைத்துள்ளது. தற்போதைய தீர்ப்பு காரணமாக 14.75 டிஎம்சி நீர் தமிழகத்திற்கு குறைவாக கிடைக்கும். ஆனால் தமிழகத்திற்கு குறைக்கப்பட்ட தண்ணீர் கர்நாடகாவிற்கு கூடுதலாக வழங்கப்பட்டுள்ளது. காவிரியில் இருந்து தமிழகத்திற்கு 177.25 டிஎம்சி நீரை ஒதுக்கீடு செய்ய கர்நாடகத்திற்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது குறித்து உங்கள் கருத்து...

Poll loading...

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com