காவிரி ஆணையம் எப்போது?: மீண்டும் நீதிமன்றத்தை நாட தமிழக அரசு திட்டம்

காவிரி ஆணையம் எப்போது?: மீண்டும் நீதிமன்றத்தை நாட தமிழக அரசு திட்டம்

காவிரி ஆணையம் எப்போது?: மீண்டும் நீதிமன்றத்தை நாட தமிழக அரசு திட்டம்
Published on

காவிரி ஆணையம் அமைப்பதற்கான அரசாணையை மத்திய அரசு வெளியிடாததை எதிர்த்து மீண்டும் நீதிமன்றத்தை நாட தமிழக அரசு திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

காவிரி விவகாரம் தொடர்பான வழக்கில், மேலாண்மை வாரியம் அமைக்க உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. ஆனால், அதனை மத்திய அரசு நிறைவேற்றவில்லை. எனவே இதுதொடர்பாக தமிழக வழக்கறிஞர்கள் குழுவுடன் தமிழக அரசின் மூத்த அதிகாரிகள் ஆலோசித்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. அடுத்த வாரம் மத்திய அரசு மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர ஆயத்தமாகியுள்ளதாக தெரிகிறது.

தென்மேற்கு பருவமழை ஜூன் ஒன்றாம் தேதி தொடங்குவது வழக்கம் என்ற நிலையில், பருவமழை காலத்துக்கு முன்பாக காவிரி ஆணையம் அமைக்க உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. இன்று ஜூன் ஒன்றாம் தேதி என்ற நிலையில், காவிரி ஆணையம் அமைக்காத மத்திய அரசு மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர்வதன் மூலம், காவிரி‌ ஆணையம் அமைப்பதற்கான தாமதத்தை தடுக்கலாம் என தமிழக அரசு தரப்பு வழக்கறிஞர்கள், அதிகாரிகள் கருதுகின்றனர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com