`பூனையை காணவில்லை!’ - கண்டுபிடித்து தந்தால் சன்மானம் என போஸ்டர் அடித்த உரிமையாளர்!

`பூனையை காணவில்லை!’ - கண்டுபிடித்து தந்தால் சன்மானம் என போஸ்டர் அடித்த உரிமையாளர்!
`பூனையை காணவில்லை!’ - கண்டுபிடித்து தந்தால் சன்மானம் என போஸ்டர் அடித்த உரிமையாளர்!

மதுரையில் காணாமல் போன தன் செல்லப்பிராணி பூனையை கண்டுபிடித்து தருமாறு போஸ்டர் அடித்து தேடிவருகிறார் அதன் உரிமையாளர்.

மதுரை பொதும்பு பகுதியை சேர்ந்தவர் விமல்குமார். இவர் தனது வீட்டில் நாய் மற்றும் பூனை உள்ளிட்ட செல்லப்பிராணிகளை வளர்த்து வருகிறார். இந்நிலையில் கடந்த சில ஆண்டுகளாக நியோ என்ற பெயரில் ஆண் பூனை ஒன்றினை, விமல்குமார் செல்லமாக வளர்த்து வந்த நிலையில், அந்தப்பூனை தீடீரென காணாமல் போயுள்ளது.

இதனால் மனமுடைந்த பூனையின் உரிமையாளர் விமல்குமார் மதுரை மாநகர் முழுவதும் பூனை நியோவின் படம் மற்றும் விவரங்களை அச்சிட்டு போஸ்டர் ஒட்டியுள்ளார்.

மேலும் பூனையை கண்டு பிடித்து கொடுப்பவருக்கு 10 ஆயிரம் ரூபாய் சன்மானம் வழங்கப்படும் எனவும், பூனையை பார்த்தால் 9360389151, 8667724046 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளவும் என போஸ்டரில் பதிவிட்டுள்ளார். இந்த போஸ்டர், தற்போது இணையத்திலும் வைரலாகி வருகிறது. 

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com