பிரபல திரையரங்கில் உணவுப் பொருட்களை பூனை சாப்பிடும் அதிர்ச்சி வீடியோ... உணவகத்துக்கு சீல்!

திரையரங்கில் உணவுப் பண்டங்களை பூனை ஒன்று சாப்பிடும் காணொளி காட்சி சமூக வலைதளங்களில் வெளியானது.

சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் உள்ள பிரபல திரையரங்கில் உணவுப் பண்டங்களை பூனை ஒன்று சாப்பிடும் காணொளி காட்சி சமூக வலைதளங்களில் வெளியானதை அடுத்து, அங்கு உணவுப் பாதுகாப்புத் துறையினர் சோதனையில் ஈடுபட்டனர். மகர்நோன்பு திடல் பகுதியில் உள்ள திரையரங்க உணவகத்தில் நடைபெற்ற சோதனையில், கேக், சமோசா, குளிர்பானங்கள் உள்ளிட்ட உணவுப் பொருட்கள் ஆய்வு செய்த அதிகாரிகள் காலாவதியான உணவுப் பொருட்களை பறிமுதல் செய்து, உணவகத்திற்கு சீல் வைத்தனர்.

Related Stories

No stories found.
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com