மளிகை பொருள் தரமாட்டாங்க, முடிவெட்ட மாட்டாங்க, டீ கடையில் இரட்டை டம்ளர் முறை: தொடரும் சாதிய பாகுபாடு

தி.மலை மாவட்டம் மோத்தக்கல் கிராமத்தில் சாதிய பாகுபாடு நிலவுகிறது என்றும் மளிகை பொருட்கள் தராததோடு, தேநீர் கடைகளில் இரட்டை டம்ளர் முறை பயன்படுத்துவதாகவும் கிராம மக்கள் வருத்தத்துடன் தெரிவித்தனர்.

"எங்கூர்ல தீண்டாமை கொடுமை அதிகமா இருக்கு. பொருள் எதுவும் வாங்க கடைகளுக்கு வரவேண்டாம்னு சொல்றாங்க. என்னோட பையன் நான்காம் வகுப்பு படிக்கிறான். டெய்லர் கடைல போயி அவனோட துணியை கொடுத்துட்டு வான்னு சொன்னேன். அவன் போய் கேட்டதுக்கு நான் அடுச்சுச் தரமாட்டேன்பா நீ போப்பான்னு சொல்லி அனுப்பியிருக்காங்க. எம்பையன் ஏம்மா என்னோட துணியை அடுச்சுத்தர மாட்டேங்கிறாங்க நான் எந்த துணியமா போட்டுட்டு போறதுன்னு கேக்குறான்.

public
publicpt desk

ரொம்ப பிரச்னையாதான் இருக்கு. டீ கடையில போயி டீ கேட்டா தனி கிளாசுதான் வெச்சு தர்றாங்க. முடி கடையில முடி வெட்டமாட்டேங்கிறாங்க. அவங்க ஏரியாவுல இருக்குற சவ வண்டி எங்க ஏரியாவுக்கு வரமாட்டேங்கிது. எங்க உரிமையை கேட்டு நாங்க போராடுறோம். இதுக்கு இன்னுமும் முடிவு தெரியல.

வன்கொடுமை சாதி பிரச்னை எங்க ஊர்ல இருந்துக்கிட்டுதான் இருக்கு. முடிதிருத்தம் செய்றது கெடையாது. டீ கடையில உள்ள போயி ஒக்காந்து டீ குடிக்கிற பழக்கமில்ல. ஓட்டல் கடையிலேயும் அதே மாதிரிதான். மளிகை கடையில எந்த பொருளும் கொடுக்காம கொஞ்சநாள் தடைபடுத்தி வெச்சிருந்தாங்க.

public
publicpt desk

ஏன் முடி அதிகமா இருக்குது முடி திருத்தம் பண்ணிட்டுவான்னு வாத்தியார் சொல்லும்போது, பசங்க முடி வெட்ட முடியல. ரொம்ப சிரமத்துக்கு ஆளாகுறாங்க. அதுக்கு அப்புறமாக பெற்றோர் அந்த பசங்கள கூட்டிக்கிட்டு போயி பக்கத்துல இருக்குற கிராமத்துல போயி வெட்டிட்டு வந்துதான் ஸ்கூலுக்கு போகணும். அப்படி பசங்க முடி வெட்டப் போகணும்னா அன்னைக்க பசங்களுக்கு ஸ்கூல லீவு தர்றாங்க."

X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com