பணமில்லா பரிவர்த்தனை இருமடங்காக அதிகரிப்பு... எஸ்பிஐ

பணமில்லா பரிவர்த்தனை இருமடங்காக அதிகரிப்பு... எஸ்பிஐ

பணமில்லா பரிவர்த்தனை இருமடங்காக அதிகரிப்பு... எஸ்பிஐ
Published on

பணமதிப்பிழப்பு நடவடிக்கைக்கு பிறகு பணமில்லா பரிவர்த்தனை இருமடங்காக அதிகரித்துள்ளதாக பாரத ஸ்டேட் வங்கியின் முதன்மை மேலாளர் தெரிவித்துள்ளார்.

குடியரசு தினவிழாவை முன்னிட்டு சென்னை நுங்கம்பாக்கத்திலுள்ள பாரத ஸ்டேட் வங்கியின் தமிழக, புதுவை தலைமை அலுவலகத்தில் தேசியக்கொடி ஏற்றப்பட்டது. எஸ்பிஐ-யின் முதன்மை மேலாளர் ரமேஷ் பாபு கொடியேற்றி வைத்து மரியாதை செலுத்தினார். பின்னர் பேசிய அவர், பணமதிப்பிழப்பு விவகாரத்தில் ஊழியர்கள் சிறப்பாக பணியாற்றியதற்கு வாழ்த்துக்களை தெரிவித்தார். மேலும், பணமதிப்பிழப்பிற்கு பிறகு எஸ்பிஐ வாடிக்கையாளர்களிடையே பணமில்லா பரிவர்த்தனை இருமடங்காக அதிகரித்து இருப்பதாகக் குறிப்பிட்டார்.

X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com