‘நாங்குநேரி வாக்காளர்களுக்கு பணப் பட்டுவாடா?’ - அறிக்கை கேட்ட சத்ய பிரதா சாஹு

‘நாங்குநேரி வாக்காளர்களுக்கு பணப் பட்டுவாடா?’ - அறிக்கை கேட்ட சத்ய பிரதா சாஹு
‘நாங்குநேரி வாக்காளர்களுக்கு பணப் பட்டுவாடா?’ - அறிக்கை கேட்ட சத்ய பிரதா சாஹு

நாங்குநேரி தொகுதியில் வாக்காளர்களுக்கு பணப் பட்டுவாடா செய்வதற்காக வைக்கப்பட்டிருந்ததாக பணம் பறிமுதல் செய்யப்பட்டதாக எழுந்த புகார் குறித்து தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி சத்ய பிரதா சாஹு அறிக்கை கேட்டுள்ளார்.

நாங்குநேரி தொகுதியிலுள்ள மூலக்கரைப்பட்டி அருகே அம்பலம் கிராமத்தில் ஒரு வீட்டை திமுகவினர் வாடகைக்கு எடுத்ததாகவும், பணப்பட்டுவாடா செய்யும் வகையில், வாக்காளர் பட்டியலை தயார் செய்ததாகவும் அப்பகுதி மக்கள் குற்றம்சாட்டி வருகின்றனர். 

மேலும் பெரியகுளம் தொகுதி எம்எல்ஏ சரவணகுமார் உள்ளிட்ட திமுகவினரை அப்பகுதி மக்கள் பணத்துடன் சிறைபிடித்து, காவல்துறைக்கு தகவல் கொடுத்ததாக தெரிகிறது. இதையடுத்து, சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தேர்தல் பறக்கும் படையினர், வீட்டின் முன் சிதறிக் கிடந்த 2.78 லட்சம் ரூபாய் மதிப்பிலான 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகளை பறிமுதல் செய்தனர். 

வீட்டிலிருந்த 7 பேரில் இருவர் தப்பியோடி விட, ஐந்து பேரிடம் விசாரணை நடைபெற்றது. வீடு மற்றும் கார்களில் பணம் இருப்பதாக மக்கள் கொடுத்த தகவலின் பேரில், வருமான வரித்துறையினரும் சோதனை நடத்தினர். இதனிடையே, நாங்குநேரி திமுக ஒன்றியச் செயலாளர் சுடலைக்கண்ணு மூலைக்கரைப்பட்டி காவல் நிலையத்தில் புகார் அளித்தார். 

அதில் தேர்தல் பணிக்காக வீடு எடுத்து தங்கியிருந்த எம்எல்ஏ சரவணக்குமார் உள்ளிட்ட 7 பேரை அந்தப் பகுதியைச் சேர்ந்த‌ 20-க்கும் மேற்பட்டோர் தாக்கி, செலவுக்காக வைத்திருந்த பணத்தை பறித்து சென்றதாக குற்றம்சாட்டினார். இருதரப்பு புகார் குறித்து விசாரணை நடத்திய காவல்துறையினர், தேர்தல் பறக்கும் படையினர் அளித்த புகாரின் அடிப்படையில் திமுக எம்எல்ஏ சரவணக்குமார் உள்ளிட்ட 7 திமுகவினர் மீது பணப்பட்டுவாடா செய்ய முயன்றதாக வழக்குப்பதிவு செய்துள்ளனர். 

திமுக எம்எல்ஏ சரவணகுமார் மற்றும் நிர்வாகிகளை தாக்கி செல்போன், பணம் பறித்ததாக அம்பலம் கிராமத்தினர் 24 பேர் மீதும் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்தசம்பவம் குறித்து தேர்தல் அதிகாரியிடம் தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி சத்ய பிரதா சாஹு அறிக்கை கேட்டுள்ளார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com