\
கேரளாவுக்கு எதிராக வழக்கு.. முதலமைச்சர் பன்னீர்செல்வம்

கேரளாவுக்கு எதிராக வழக்கு.. முதலமைச்சர் பன்னீர்செல்வம்

கேரளாவுக்கு எதிராக வழக்கு.. முதலமைச்சர் பன்னீர்செல்வம்
Published on: 

பவானி ஆற்றில் கேரளா அணை கட்டுவதை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்படும் என முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் அறிவித்துள்ளார்.

காவிரி ஆற்றின் கிளை நதியான பவானி ஆற்றின் குறுக்கே 6 தடுப்பணைகளை கட்டுவதற்கு கேரள அரசு முயற்சித்து வருகிறது. எனவே பவானி ஆற்றின் குறுக்கே கேரளா தடுப்பணை கட்டுவதை உடனடியாக தடுத்து நிறுத்த வேண்டும் என பல்வேறு தமிழக அரசியல் கட்சிகள் அரசை வலியுறுத்தி வந்தன. இவ்விவகாரம் தமிழக சட்டப்பேரவையிலும் இன்று எதிரொலித்தது. அப்போது பவானி ஆற்றில் கேரளா அணை கட்டுவதை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் 2 நாட்களில் வழக்கு தொடரப்படும் என முதலமைச்சர் பன்னீர்செல்வம் தெரிவித்தார்.

மேலும் கேரள அரசு, பவானி ஆற்றின் குறுக்கே தடுப்பணை கட்டுவதை தடுக்கக்கோரி பிரதமருக்கு ஏற்கனவே தமிழக அரசு சார்பில் கடிதம் எழுதப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com