திருச்சி: படுத்துக் கொண்டே இருசக்கர வாகனத்தை ஓட்டிய இளைஞர் - வீடியோ வைரலான நிலையில் வழக்குப்பதிவு

இருசக்கர வாகனத்தை படுத்துக் கொண்டே ஓட்டிச் செல்லும் இளைஞர் வீடியோ இணையத்தில் வைரலான நிலையில், 8 பிரிகளின் கீழ் போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
ஆபத்தான பயணம் மேற்கொண்டு மக்களுக்கு இடையூறு செய்த இளைஞர்
ஆபத்தான பயணம் மேற்கொண்டு மக்களுக்கு இடையூறு செய்த இளைஞர்pt desk

செய்தியாளர்: பிருந்தா

முத்தரையர் சதய விழாவின் போது திருச்சி ஒத்தக்கடையில் உள்ள அவரது திருவுருவச் சிலைக்கு மாலை அணிவிப்பதற்காக இளைஞர்கள் திருச்சி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து இருசக்கர மற்றும் நான்கு சக்கர வாகனங்களில் ஊர்வலமாக சென்றனர்.

அப்போது, திருச்சி மாவட்டம் மண்ணச்சநல்லூர் – துறையூர் சாலையில் பிரகாஷ் என்ற இளைஞர் தனது இரு சக்கர வாகனத்தில் படுத்தவாறு ஓட்டி ஆபத்தான முறையில் சாகச பயணத்தில் ஈடுபட்டதுடன் அதை வீடியோவாக பதிவு செய்து இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவேற்றம் செய்துள்ளார்.

திருச்சி - ஆபத்தான பயணம் மேற்கொண்டு மக்களுக்கு இடையூறு செய்த இளைஞர்
திருச்சி - ஆபத்தான பயணம் மேற்கொண்டு மக்களுக்கு இடையூறு செய்த இளைஞர்pt desk

அந்த வீடியோ தற்போது வைரலாகி அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகிறது.

இந்நிலையில் இருசக்கர வாகனத்தில் படுத்தபடியே அதிவேகத்தில் இருசக்கர வாகனத்தை ஓட்டி, பொதுமக்களையும், வாகன ஓட்டிகளையும் அச்சுறுத்தியதாக புலிவலம் பகுதியை சேர்ந்த சிங்காரம் என்பவரின் மகன் நிவேஷ் (19) என்பவர் மீது புலிவலம் போலீசார், 8 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

ஆபத்தான பயணம் மேற்கொண்டு மக்களுக்கு இடையூறு செய்த இளைஞர்
அரியலூர்: தண்ணீர் இல்லா கிணற்றில் தவறி விழுந்த மூதாட்டி – பத்திரமாக மீட்ட ஆம்புலன்ஸ் ஊழியர்கள்

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com