pet dogfile
தமிழ்நாடு
சென்னை | ஐஏஎஸ் அதிகாரியை கடித்த வளர்ப்பு நாய் - உரிமையாளர்கள் இருவர் மீது வழக்குப் பதிவு
ஐஏஎஸ் அதிகாரியை வளர்ப்பு நாய் கடித்த விவகாரம் தொடர்பாக நாய் உரிமையாளர்கள் இருவர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
சென்னையில் ஐஏஎஸ் அதிகாரியான உமா மகேஸ்வரி என்பவர் தனது கணவரான வழக்கறிஞர் விமல் ஆனந்த் என்பவரோடு நடைபயிற்சி மேற்கொண்டிருந்தார். அப்போது ஐஏஎஸ் அதிகாரி உமா மகேஸ்வரியை கோம்பை இன வளர்ப்பு நாய் கடித்துள்ளது. இதில் காயமடைந்த அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
\
இந்த சம்பவத்தில் நாயின் உரிமையாளர்களான சுரேஷ் மற்றும் அவரது மனைவி ஸ்ரீஜா ஆகியோர் மீது, 291 BNS (தாம் வளர்க்கும் வளர்ப்பு பிராணிகள், பிறருக்கு ஆபத்தை விளைவிக்கும் வகையில் அஜாக்ரதையாக செயல்படுவது), 292 BNS (பொது தொந்தரவு ஏற்படுத்துதல்) உள்ளிட்ட இரண்டு பிரிவுகளின் கீழ் ராயப்பேட்டை போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.