தவெக மாவட்ட தலைவர் மீது வழக்குப் பதிவு
தவெக மாவட்ட தலைவர் மீது வழக்குப் பதிவுpt desk

தேனி: பொதுமக்களுக்கு இடையூறாக பிறந்தநாள் கொண்டாட்டம் - தவெக மாவட்ட தலைவர் மீது வழக்குப் பதிவு

தேனியில் பொதுமக்களுக்கு இடையூறாக பிறந்த நாள் கொண்டாட்டத்தில் ஈடுபட்டதாக தவெக மாவட்ட தலைவர் மீது போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
Published on

செய்தியாளர்: ரமேஷ் கண்ணன்

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழக தேனி மாவட்ட தலைவர் லெஃப்ட் பாண்டிக்கு, நேற்று முன்தினமான நவம்பர் 10ம் தேதி தனது பிறந்தநாள் வந்துள்ளது. அதனையொட்டி அவருக்கு சொந்த ஊரான கருவேல்நாயக்கன் பட்டியில், தவெக கட்சியினரால் கிரேன் மூலம் ஆளுயர ராட்சத மலர் மாலை அணிவிக்கப்பட்டது.

தவெக மாவட்ட தலைவர் மீது வழக்குப் பதிவு
தவெக மாவட்ட தலைவர் மீது வழக்குப் பதிவுpt desk

தேனி - மதுரை தேசிய நெடுஞ்சாலையில் நடந்த இந்த பிறந்தநாள் கொண்டாட்டத்தால் போக்குவரத்துக்கும், பொதுமக்களுக்கும் இடையூறு ஏற்பட்டதாக தேனி அல்லிநகரம் கிராம நிர்வாக அலுவலர் ஜீவா, தேனி நகர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

தவெக மாவட்ட தலைவர் மீது வழக்குப் பதிவு
மதுரை: தவெகவை ஒடுக்கும் காவல்துறை? ‘விலையில்லா விருந்தகம்’ திடீர் அகற்றத்தால் வெடித்த சர்ச்சை!

அதன்படி, தவெக தேனி மாவட்ட தலைவர் பாண்டியன் என்ற லெஃப்ட் பாண்டி மீது தேனி நகர் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com