பெண் விவசாயியை தாக்க முயன்றதாக புகார் - அய்யாக்கண்ணு மீது 2 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு

பெண் விவசாயியை தாக்க முயன்றதாக புகார் - அய்யாக்கண்ணு மீது 2 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு
பெண் விவசாயியை தாக்க முயன்றதாக புகார் - அய்யாக்கண்ணு மீது 2 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு

மாவட்ட ஆட்சியர் முன்பு பெண் விவசாயியை தாக்க முயன்ற விவசாய சங்கத் தலைவர் அய்யாக்கண்ணு மீது 2 பிரிவின் கீழ் வழக்கு பதிவுசெய்யப்பட்டுள்ளது.

திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஆட்சித் தலைவர் பிரதீப் குமார் தலைமையில் விவசாயிகள் குறைதீர்ப்பு நாள் கூட்டம் நேற்று (30.09.2022) நடைபெற்றது. இதில் தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாய சங்க தலைவர் அய்யாக்கண்ணு அனுமதிக்கப்பட்ட நேரத்தை விட கூடுதலாக பேசியதால் பெண் விவசாயி கவுசல்யா ஆட்சேபம் தெரிவித்தார்.

இதனைத் தொடர்ந்து ஆட்சேபம் தெரிவித்த பெண் விவசாயியை அய்யாக்கண்ணு மற்றும் அவரது ஆதரவாளர்கள் தகாத வார்த்தைகளால் திட்டியும், அடிக்க முயன்றதாகவும் கூறப்படுகிறது. இச்சம்பவம் மாவட்ட ஆட்சியருக்கு முன்பு நடந்ததால், அப்போது பாதுகாப்பு பணியில் இருந்த காவல்துறையினர் (தமிழக விவசாயிகள் சங்க மகளிர் அணி தலைவி) விவசாய சங்க பெண் தலைவியை கூட்ட அரங்கில் இருந்து வெளியேற்றினர். மேலும் வாக்குவாதத்தில் ஈடுபட்டவர்களை அங்கிருந்தவர்கள் சமாதானப்படுத்தினர்.

அய்யாக்கண்ணு உள்ளிட்ட விவசாயிகள் தரக்குறைவாக ஆபாச வார்த்தைகளை பயன்படுத்தியதற்கு மற்ற விவசாயிகள் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால் விவசாயிகள் குறைதீர் கூட்டம் பரபரப்புடன் காணப்பட்டது. இச்சம்பவம் குறித்து அமர்வு நீதிமன்ற காவல் நிலைய போலீசார் விசாரணை நடத்தினர். பின்னர் விவசாய சங்கப் பெண் நிர்வாகியை தகாத வார்த்தைகளால் திட்டியதாகவும், தாக்க முயன்றதாகவும் பாதிக்கப்பட்ட பெண் விவசாயி புகார் அளித்தார்.

இதன் அடிப்படையில் தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு சங்க மாநிலத் தலைவர் அய்யாக்கண்ணு மீது பெண்ணை ஆபாச வார்த்தைகளால் திட்டியது மற்றும் வன்கொடுமை தடுப்பு சட்டம் ஆகிய இரண்டு பிரிவின் கீழ் அமர்வு நீதிமன்ற காவல் நிலையத்தில் வழக்குபதிவு செய்யப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com