தமிழ்நாடு
அனுமதியின்றி காளைகளை அவிழ்த்துவிட்டதாக 16 பேர் மீது வழக்கு
அனுமதியின்றி காளைகளை அவிழ்த்துவிட்டதாக 16 பேர் மீது வழக்கு
மதுரை மாவட்டம் பாலமேட்டில் அனுமதியின்றி காளைகளை அவிழ்த்துவிட்டதாக 16 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
பாலமேட்டில் கோயில் பூஜைக்காக அழைத்து வரப்பட்ட காளைகளை அவிழ்த்துவிட்டதாக 16 பேர் மீதும் வழக்குப்பதிவு செய்யப்பட்டு, நீதிமன்ற காவலில் வைக்கப்பட்டுள்ளனர். இவர்கள் வெளியூறைச் சேர்ந்தவர்கள் என காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்படுகிறது.
இதனிடையே அனுமதியின்றி காளைகளை அவிழ்த்துவிடுவோர், அவர்களை தூண்டிவிடுவோர் என அனைவர் மீதும் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என காவல்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது. சமூக வலைதளங்களை தொடர்ந்து கண்காணித்து வருவதாகவும், சமூக வலைதளங்களில் பரப்பப்படும் தகவல்கள் தொடர்பாக வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

