த.வெ.க. கொடியில் யானை - பி.எஸ்.பி. எதிர்ப்பு
த.வெ.க. கொடியில் யானை - பி.எஸ்.பி. எதிர்ப்பு pt desk

தவெக கொடியில் இடம்பெற்றுள்ள யானை சின்னம் தொடர்பான வழக்கு - நீதிமன்றம் புதிய உத்தரவு

தமிழக வெற்றிக் கழக கட்சியின் கொடியில் இடம்பெற்றுள்ள யானை சின்னத்தை பயன்படுத்த தடை கோரிய வழக்கு விசாரணை ஜூன் 4 ஆம் தேதிக்கு தள்ளிவைத்து சென்னை உரிமையியல் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
Published on

செய்தியாளர்: V.M.சுப்பையா

தமிழக வெற்றிக் கழக கட்சி கொடியில் இடம் பெற்றுள்ள யானை சின்னம் தொடர்பாக பகுஜன் சமாஜ் கட்சியின் தமிழக பொதுச் செயலாளர் பெரியார் அன்பன் என்கிற இளங்கோவன் சென்னை முதல் உதவி உரிமையியல் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார்.

அதில், நாங்கள் அங்கீகரிக்கப்பட்ட தேசிய கட்சி எங்கள் கட்சியின் யானை சின்னம் ஆகும். இதனை தேர்தல் ஆணையம் அங்கீகாரித்துள்ளது. அங்கீகரிக்கப்பட்ட கட்சியின் சின்னத்தை யாரும் பயன்படுத்த முடியாது. இது தொடர்பாக ஏற்கனவே தேர்தல் ஆணையத்தில் புகார் அளிக்கபட்டுள்ளது. எனவே தற்போது தவெக கட்சி கொடியில் யானை சின்னத்தை பயன்படுத்த தடை விதிக்க வேண்டும் என கோரிக்கை வைத்திருந்தார்.

த.வெ.க. கொடியில் யானை - பி.எஸ்.பி. எதிர்ப்பு
பஹல்காம் தாக்குதல் | “உயிரிழந்தோர் குடும்பத்திற்கு அரசு வேலை” - மஹாராஷ்டிரா அரசு அறிவிப்பு

இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம், தவெக கட்சி தலைவர் விஜய், பொதுச் செயலாளர் ஆனந்த் ஆகியோர் பதிலளிக்க வேண்டும் என உத்தரவிட்டது.

இந்நிலையில், இந்த வழக்கு முதலாவது உதவி உரிமையியல் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. நீதிபதி இன்று விடுமுறை என்பதால் பொறுப்பு நீதிபதி வழக்கை ஜூன் 4 ஆம் தேதிக்கு தள்ளிவைத்து உத்தரவிட்டார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com