பூங்காவில் மின்சாரம் தாக்கி 2 சிறார் உயிரிழந்த விவகாரம் - விசாரணையில் தொய்வு... யார்தான் காரணம்?

கோவையில் தனியார் குடியிருப்பில் உள்ள பூங்காவில் மின்சாரம் தாக்கி 2 சிறார் உயிரிழந்த நிலையில், இதுவரை இந்த சம்பவத்தின் விசாரணை வழக்குப்பதிவு என்ற நிலையிலேயே நிற்கிறது.
குடியிருப்பு பகுதியில் இருக்கும் பூங்கா
குடியிருப்பு பகுதியில் இருக்கும் பூங்காpt web

செய்தியாளர் - சுதீஷ்

ஒளிப்பதிவாளர் - தீபன்

கோவையில் தனியார் குடியிருப்பில் உள்ள பூங்காவில் மின்சாரம் தாக்கி 2 சிறார் உயிரிழந்த நிலையில், இதுவரை இந்த சம்பவத்தின் விசாரணை வழக்குப்பதிவு என்ற நிலையிலேயே நிற்கிறது. மின்சாரம் தாக்கி 2 உயிர் போன பிறகும், தொடரும் அலட்சியம் அதிர்ச்சியளிக்கும் வகையிலேயே இருக்கிறது.

கோவை சின்னவேடம்பட்டியில் ஓய்வு பெற்ற ராணுவவீரர்கள் வசிக்கும் கேட்டட் கம்யூனிட்டியில், பூங்காவில் மின்சாரம் தாக்கி சிறார் உயிரிழந்து நான்கு நாட்களாகியும் இன்னும் இந்த சம்பவத்தின் உண்மை பொறுப்பாளிகள் மீது வழக்குப்பதியப்பட்டதா என்றால் இல்லை என்றே தெரியவருகிறது.

கடந்த 24 ஆம்தேதி பூங்காவில் விளையாடிக் கொண்டிருந்த 8 வயது சிறுமி வியோமா பிரியா மற்றும் 6 வயது சிறுவன் ஜியான்ஸ் ரெட்டி ஆகியோர் இரும்பு கம்பியை பிடித்தபோது மின்சாரம் தாக்கி உயிரிழந்தனர். முதலில் இயற்கைக்கு மாறான சந்தேக மரணம் என்ற பெயரில் வழக்கு பதிவு செய்யப்பட்டிருந்தது. இந்த நிலையில் குழந்தைகளின் உயிரிழப்பிற்கு யாருடைய அஜாக்கிரதை காரணம் என காவல்துறையினர் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வந்தனர்.

குடியிருப்பு பகுதியில் இருக்கும் பூங்கா
சவுக்கு சங்கர் விவகாரம்; நீதிபதிக்கே அழுத்தம் கொடுப்பவர்கள் யார்? CBI விசாணைக்கு கோரி கடிதம்

அதில் குடியிருப்பு சார்பில் தனிப்பட்ட முறையில் அமைக்கப்பட்ட தெரு விளக்கிற்கான புதைவட இணைப்பிலிருந்துதான் மின் கசிவு ஏற்பட்டு குழந்தைகள் விளையாடிக் கொண்டிருந்த சறுக்கு விளையாட்டின் கைப்பிடியில் மின்சாரம் பாய்ந்து உயிரிழந்தது தெரிய வந்தது.

இதுதொடர்பாக ஒப்பந்ததாரர்கள் முருகன், சீனிவாசன், சிவா ஆகியோரிடம் தொடர்ந்து விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதன்பேரில் இந்த வழக்கு பிரிவு 304(A) அஜாக்கிரதையாக செயல்பட்டு மனித உயிருக்கு ஆபத்து விளைவித்தல் பிரிவுக்கு மாற்றம் செய்யப்பட்டது. மேலும் வழக்கு குறித்து ஆய்வு செய்யப்பட்டு வருவதாக கோவை மாநகர காவல் துறை ஆணையாளர் பாலகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

குடியிருப்பு பகுதியில் இருக்கும் பூங்கா
கோவை: குடியிருப்பு பூங்காவில் விளையாடிக் கொண்டிருந்த இரு குழந்தைகளுக்கு நேர்ந்த பரிதாபம்

மின்வாரிய அதிகாரிகள் பூங்காவில் மேற்கொண்ட ஆய்வுக்குப்பிறகு மின்வாரியம் தரப்பில் பூங்காவிற்கான மின் இணைப்பு கொடுக்கப்படவில்லை எனவும் சட்டவிரோதமாக பூங்காவிற்கு மின் இணைப்பு கொடுக்கப்பட்டுள்ளதாகவும் மின்வாரியம் தரப்பில் காவல்துறையிடம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பூங்கா அமைக்கப்பட்டிருந்த இடம் கோவை மாநகராட்சிக்கு சொந்தமான இடத்தில் இல்லை எனவும் குடியிருப்பு வாசிகளுக்கு சொந்தமான இடத்தில் பூங்கா அமைத்து நிர்வகித்து வந்துள்ளதாகவும் கோவை மாநகராட்சி ஆணையாளர் சிவகுரு பிரபாகரன் தெரிவித்துள்ளார்.

மொத்தத்தில், மின்வாரியமும் பொறுப்பில்லை, மாநகராட்சியும் பொறுப்பில்லை, குடியிருப்பு நிர்வாகம் தரப்பிலும் இதுவரை எந்த விளக்கமும் பொறுப்பேற்பும் இல்லை எனில் இரண்டு சிறார்களின் உயிர்களின் மதிப்புதான் என்ன?

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com