\
கொரோனா விதிகளை மீறி ஊர்வலம்: பச்சையப்பன் கல்லூரி மாணவர்கள் 200 பேர் மீது வழக்குப்பதிவு

கொரோனா விதிகளை மீறி ஊர்வலம்: பச்சையப்பன் கல்லூரி மாணவர்கள் 200 பேர் மீது வழக்குப்பதிவு

கொரோனா விதிகளை மீறி ஊர்வலம்: பச்சையப்பன் கல்லூரி மாணவர்கள் 200 பேர் மீது வழக்குப்பதிவு
Published on
கொரோனா விதிகளை மீறி ஊர்வலம் நடத்தியதாக சென்னை பச்சையப்பன் கல்லூரி மாணவர்கள் 200 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
பச்சையப்பன் கல்லூரியில் படிக்கும் மாணவர்கள் இடையே 'எந்த ரூட் சிறந்தது' என்ற போட்டியில், 3 குழுவாக பிரிந்து ஊர்வலமாக சென்று பச்சையப்பன் சிலைக்கு மாலை அணிவித்துள்ளனர். இந்த நிலையில், தடையை மீறி ஊர்வலத்தில் ஈடுபட்டதாக 200 மாணவர்கள் மீது தொற்றுநோய் பரவ காரணமாக இருத்தல் உள்ளிட்ட 3 பிரிவுகளின் கீழ் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்தனர். மேலும் இந்த ஊர்வலத்தில் கலந்து கொண்ட முன்னாள் மாணவர்கள் மீதும் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com