தமிழ்நாடு
ஆட்டோவில் சென்றதற்கு வழக்குப்பதிவு - பெட்ரோல் ஊற்றி தீ வைத்துக்கொண்ட ஆட்டோ ஓட்டுனர்
ஆட்டோவில் சென்றதற்கு வழக்குப்பதிவு - பெட்ரோல் ஊற்றி தீ வைத்துக்கொண்ட ஆட்டோ ஓட்டுனர்
ஆட்டோவில் சென்றதற்காக வழக்குப்பதிவு செய்ததால் பெட்ரோல் ஊற்றி தீ வைத்துக்கொண்ட ஆட்டோ ஓட்டுனர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
சென்னை தாம்பரம் அடுத்த காந்தி ரோடு முடிச்சூர் சாலையில் போக்குவரத்து உதவி ஆய்வாளர் ரவிசந்திரன் தலைமையில் போக்குவரத்து போலீசார் வாகனச் சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அவ்வழியே படப்பையைச் சேர்ந்த 40 வயதான ஹரி என்பவர் ஆட்டோ ஓட்டி வந்ததாகத் தெரிகிறது. அவரை பிடித்த காவல்துறையினர் அவர் மீது வழக்குப்பதிவு செய்து அனுப்பியுள்ளனர்.
இதனால் வேதனையடைந்த ஹரி வழக்குப்பதிவு செய்த அதே இடத்திற்கு பெட்ரோல் கேனுடன் வந்து தனக்கு தானே பெட்ரோல் ஊற்றிக் கொண்டு தீ வைத்து கொண்டார். இதில் காயமடைந்த அவருக்கு குரோம்பேட்டை அரசு பொது மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வரப்படுகிறது.