வேல்முருகன், திருமுருகன் காந்தி மீது வழக்குப்பதிவு

வேல்முருகன், திருமுருகன் காந்தி மீது வழக்குப்பதிவு
வேல்முருகன், திருமுருகன் காந்தி மீது வழக்குப்பதிவு

கடந்தாண்டில் நடந்த போராட்டம் தொடர்பாக தற்போது வேல்முருகன், திருமுருகன் காந்தி மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் 29-ம்தேதி சென்னை சேப்பாக்கம் அரசு விருந்தினர் மாளிகை அருகில் தமிழக வாழ்வுரிமைக் கட்சி சார்பில் அதன் மாநில தலைவர் வேல்முருகன் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. காவல்துறையின் அனுமதியுடன் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில், ஒரு சமூகத்தினரிடையே வன்மத்தை தூண்டும் வகையிலும், பொது அமைதிக்கு பங்கம் விளைவிக்கும் வகையில் பேசியதாக தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் வேல்முருகன் மற்றும் 20 பேர் மீது திருவல்லிக்கேணி போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். நேற்றுதான் திருவல்லிக்கேணி போலீசார் சார்பில் 3 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

இதேபோல, கடந்த மே மாதம் சேப்பாக்கம் அரசு விருந்தினர் மாளிகை அருகில் மே 17 இயக்க ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தி தலைமையில் காவல்துறையின் அனுமதியுடன் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் தமிழக வாழ்வுரிமைக் கட்சி மாநில தலைவர் வேல்முருகனும் பங்கேற்றார்.  இந்தப் போராட்டத்தில், ஒரு சமூகத்தினரிடையே வன்மத்தை தூண்டும் வகையிலும், பொது அமைதிக்கு பங்கம் விளைவிக்கும் வகையில் பேசியதாக திருமுருகன் காந்தி, வேல்முருகன் மற்றும் 10 பேர் மீது நேற்று திருவல்லிக்கேணி போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். 3 பிரிவுகளில் இந்த வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com