திமுக வேட்பாளர் துரைமுருகன்மீது வழக்குப்பதிவு

திமுக வேட்பாளர் துரைமுருகன்மீது வழக்குப்பதிவு

திமுக வேட்பாளர் துரைமுருகன்மீது வழக்குப்பதிவு
Published on

திமுக பொதுச்செயலாளரும் காட்பாடி வேட்பாளருமான துரைமுருகன் மீது காவல்துறையில் வழக்குபதிவு செய்யப்பட்டுள்ளது. 

காட்பாடி தொகுதிக்குட்பட்ட குப்பத்தாமோட்டூர் பகுதியில் நேற்று இரவு தி.மு.க பிரமுகர் கோபி என்பவர் பணப்பட்டுவாடா செய்வதாக வந்த புகாரை அடுத்து பறக்கும்படையினர் சம்பவ இடத்தில் சோதனை மேற்கொண்டனர். அதில்  கோபி பணப்பட்டுவாடா செய்தது தெரியவந்து அவரிடம் இருந்து 56 ஆயிரம் ரொக்கப்பணம் மற்றும் திமுக துண்டு பிரசுரங்கள் பறிமுதல் செய்யப்பட்டது. 

இதனால் திமுக பிரமுகர் கோபியை கைது செய்து சிறையில் அடைத்துள்ள போலீஸார், இது தொடர்பாக கைதான கோபி மீது 3 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவும் (171e, 294b, 353) மற்றும் காட்பாடி தொகுதி வேட்பாளரும் தி.மு.க பொதுச்செயலாருமான துரைமுருகன் மீது பிரிவு 171e இன் கீழ் வழக்குப்பதிவும் செய்துள்ளனர். வாக்காளர்களுக்கு பணம் கொடுத்து வாக்குகளை பெற முயற்சித்தல், அவதுறாக பேசுதல் மற்றும் அரசு அலுவலர்களை பணி செய்யவிடாமல் தடுத்தல் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. 

முன்னதாக, திருச்சி மேற்கு தொகுதி திமுக வேட்பாளர் கே.என்.நேரு மீது முசிறி காவல்நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com