தமிழ்நாடு
போராட்டத்தில் ஈடுபட்ட மருத்துவர்கள் மீது வழக்குப் பதிவு
போராட்டத்தில் ஈடுபட்ட மருத்துவர்கள் மீது வழக்குப் பதிவு
ஊதிய உயர்வு உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்ட மருத்துவர்கள் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையின் மண்டல மருத்துவ அலுவலர் திருநாவுக்கரசு அளித்த புகாரின் அடிப்படையில், போராட்டத்தில் ஈடுபட்ட 8 மருத்துவர்கள் மற்றும் பல அடையாளம் தெரியாதவர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. அதில், சட்டவிரோதமாகக் கூடுதல், அத்துமீறி நடந்துகொள்ளுதல், பொது இடங்களில் தொல்லை கொடுத்தது உள்ளிட்ட மூன்று பிரிவின் கீழ் காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
முதலமைச்சர் பழனிசாமி, அமைச்சர் விஜய பாஸ்கரின் கோரிக்கையை ஏற்று வேலை நிறுத்தத்தை தற்காலிகமாக வாபஸ் பெறுவதாக அரசு மருத்துவர்கள் சங்க கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளர் லட்சுமி நரசிம்மன் இன்று அறித்துள்ளார் என்பது குறிப்படத்தக்கது.