தமிழ்நாடு
தமிழக பாஜக தலைவர் எல்.முருகன் மீது வழக்குப்பதிவு
தமிழக பாஜக தலைவர் எல்.முருகன் மீது வழக்குப்பதிவு
பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தியதாக பாஜக மாநில தலைவர் முருகன் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
சென்னையில் பிரதமர் மோடி பிறந்தநாள் விழாவின்போது, பாஜக அலுவலகத்திற்கு பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் குதிரை வண்டியில் வந்ததாக பாஜக மாநில தலைவர் முருகன் மீது மாம்பலம் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். அவர் மட்டுமன்றி மாநில பொதுச் செயலாளர் கரு.நாகராஜன், மாவட்ட தலைவர் சைதை சந்துரு உட்பட 6 பேர் மீது இரண்டு பிரிவுகளில் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். அதைப்போல அதே பகுதியில் அனுமதி இல்லாமல் பேனர் வைத்ததாக பாஜகவைச் சேர்ந்த நிர்வாகிகள் மீதும் 3 வழக்குகளை போலீசார் பதிவு செய்துள்ளனர்.