\
சென்னையில் நேரக் கட்டுப்பாட்டை மீறி பட்டாசு வெடித்தோர்மீது வழக்குப்பதிவு

சென்னையில் நேரக் கட்டுப்பாட்டை மீறி பட்டாசு வெடித்தோர்மீது வழக்குப்பதிவு

சென்னையில் நேரக் கட்டுப்பாட்டை மீறி பட்டாசு வெடித்தோர்மீது வழக்குப்பதிவு
Published on

சென்னை காவல் எல்லைக்கு உட்பட்ட இடங்களில் நேரக் கட்டுப்பாட்டை மீறி பட்டாசு வெடித்த 50-க்கும் மேற்பட்டோர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

தமிழகத்தில் காலை 6 மணி முதல் 7 மணி வரையும், மாலை 7 மணி முதல் 8 மணி வரையும் பட்டாசு வெடிக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், சென்னை அம்பத்தூர் காவல் எல்லைக்கு உட்பட்ட பூந்தமல்லி, போரூர், மாங்காடு, அம்பத்தூர், ஆவடி, பட்டாபிராம், நசரத்பேட்டை உள்ளிட்ட இடங்களில் நேரக் கட்டுப்பாட்டை மீறி பட்டாசு வெடித்த 50க்கும் மேற்பட்டோர் மீது காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

காவல்துறையினர் வீதி வீதியாகச் சென்று வழக்குப்பதிவு செய்தது பொதுமக்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com