மு.க.ஸ்டாலின் உள்ளிட்டோர் மீது வழக்குப்பதிவு

மு.க.ஸ்டாலின் உள்ளிட்டோர் மீது வழக்குப்பதிவு

மு.க.ஸ்டாலின் உள்ளிட்டோர் மீது வழக்குப்பதிவு
Published on

தேர்தல் நடத்தை விதிமுறைகளை மீறியதாக திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், அக்கட்சியின் வேட்பாளர் கதிர் ஆனந்த் உள்ளிட்டோர் மீது வேலூர் மக்களவைத் தொகுதிக்குட்பட்ட ஆம்பூரில் மூன்று பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

இஸ்லாமிய அமைப்புகளின் தலைவர்களுடன் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், பொருளாளர் துரைமுருகன், திமுக வேட்பாளர் கதிர் ஆனந்த் உள்ளிட்டோர் ஆம்பூரில் உள்ள தனியார்‌ மண்டபத்தில் நேற்று ஆலோசனைக் கூட்டம் நடத்தினர். கூட்டம் முடிந்த பின், அங்கு சென்ற தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் தேர்தல் நடத்தை விதிகள் அமலில் உள்ள நிலையில், அனுமதியின்றி ஆலோசனைக் கூட்டம் நடத்தப்பட்டது என்று தங்களுக்கு புகார் வந்ததாக தெரிவித்தனர். 

வட்டாட்சியர் சுஜாதா தலைமையில் ஆய்வு மேற்கொண்ட அதிகாரிகள் சம்பந்தப்பட்ட தனியார் மண்டபத்திற்கு சீல் வைத்தனர். அதனைத் தொடர்ந்து வட்டாட்சியர் சுஜாதா ஆம்பூர் நகர காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இதையடுத்து, மு.க.ஸ்டாலின், வேட்பாளர் கதிர் ஆனந்த், கட்சி நிர்வாகிகள், மண்டப உரிமையாளர் ‌ஜக்கரியா, சுன்னத் ஜமாத் அமைப்பை சேர்ந்த நிர்வாகிகள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. அரசு அதிகாரியின் உத்தரவை மீறியது, தனிப்பட்ட செல்வாக்கை தவறுதலாக பயன்படுத்தியது உள்ளிட்ட 3 பிரிவுகளில் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com