தமிழ்நாடு
குடிபோதையில் கார் பந்தயம்? - பாரதிராஜா மகன் மீது வழக்கு
குடிபோதையில் கார் பந்தயம்? - பாரதிராஜா மகன் மீது வழக்கு
குடிபோதையில் கார் ஓட்டியதாக பாரதிராஜாவின் மகனும் நடிகருமான மனோஜ் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
சென்னை நுங்கம்பாக்கம் பகுதியில் சென்றுகொண்டிருந்த பி.எம்.டபிள்யு கார் ஒன்றை நிறுத்தி காவல்துறையினர் சோதனையிட்டனர். அந்த காருக்குள் இருந்தவர் பாரதிராஜாவின் மகன் மனோஜ் என்று பின்னர் தான் தெரிந்துள்ளது. ஆனால் அவர் மதுபோதையில் இருந்ததாகவும் கூறப்படுகிறது. இதையடுத்து குடிபோதையில் கார் ஓட்டிய குற்றத்திற்காக, மனோஜ் மீது நுங்கம்பாக்கம் காவல்துறையினர் வழக்கப்பதிவு செய்தனர். அத்துடன் அவரது பி.எம்.டபிள்யு காரையும் பறிமுதல் செய்தனர்.