\
எம்.ஆர்.விஜயபாஸ்கர் மீது சொத்துக் குவிப்பு வழக்கு பதிவு

எம்.ஆர்.விஜயபாஸ்கர் மீது சொத்துக் குவிப்பு வழக்கு பதிவு

எம்.ஆர்.விஜயபாஸ்கர் மீது சொத்துக் குவிப்பு வழக்கு பதிவு
Published on

அதிமுகவைச் சேர்ந்த முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் மீது சொத்துக் குவிப்பு வழக்கை லஞ்ச ஒழிப்புத்துறை பதிவு செய்துள்ளது.

கடந்த அதிமுக ஆட்சியில் போக்குவரத்து துறை அமைச்சராக இருந்தவர் எம்.ஆர்.விஜயபாஸ்கர். நடந்து முடிந்த சட்டப்பேரவை தேர்தலில் கரூர் தொகுதியில் போட்டியிட்டு திமுகவின் செந்தில் பாலாஜியிடம் தோல்வியை தழுவினார். இந்நிலையில் கரூரில் 20 இடங்களிலும் சென்னையில் ஒரு இடத்திலும் லஞ்ச ஒழிப்புத்துறையினர் திடீரென சோதனை நடத்தி வருகின்றனர்.

போக்குவரத்து துறை அமைச்சராக இருந்தபோது முறைகேட்டில் ஈடுபட்டதாக வந்த புகாரையடுத்து லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை நடத்தியது. இதில் அமைச்சராக இருந்த காலக்கட்டத்தில் வருமானத்துக்கு மீறி சொத்துகளை சேர்த்ததாக அவர் மீது சொத்துக்குவிப்பு வழக்கை பதிவு செய்துள்ளது லஞ்ச ஒழிப்புத்துறை.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com