மளிகைக்கடை டோக்கன் விவகாரம்.. அமமுக பிரமுகர் மீது வழக்குப்பதிவு!

மளிகைக்கடை டோக்கன் விவகாரம்.. அமமுக பிரமுகர் மீது வழக்குப்பதிவு!

மளிகைக்கடை டோக்கன் விவகாரம்.. அமமுக பிரமுகர் மீது வழக்குப்பதிவு!
Published on

கும்பகோணத்தில் வாக்காளர்களுக்கு இரண்டாயிரம் ரூபாய்க்கு மளிகைப் பொருள்களை வாங்குவதற்கான டோக்கன் கொடுத்ததாக அமமுக பிரமுகர் மீது காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

கும்பகோணம் பெரிய தெருவில் உள்ள பிரிமியம் ஏஜென்சிஸ் மளிகைக்கடைக்கு, கடையின் பெயர் இடம்பெற்றிருந்த டோக்கனைக் கொடுத்து பொருள்களை வாங்க மக்கள் திரண்டனர். 2000 ரூபாய்க்கான மளிகைப் பொருட்களை இலவசமாக கொடுக்குமாறு கேட்டு வாதிட்டனர். ஆனால் டோக்கனுக்கு பொருள்கள் கொடுக்க முடியாது என மறுத்து கடையின் உரிமையாளர் அவர்களை அனுப்பினார். அடுத்தடுத்து ஆள்கள் வந்ததால் சமாளிக்க முடியாமல் ஒரு கட்டத்தில் கடையையே மூடி விட்டார் அவர். கடைக்கும் டோக்கனுக்கு எந்த சம்பந்தமும் இல்லை என எழுதி ஓட்டினார்.

டோக்கன் விவகாரம் குறித்து கும்பகோணம் கிழக்கு காவல் நிலையத்தில் புகாரும் அளித்தார். அதன்பேரில், அமமுக நிர்வாகி கனகராஜ் என்பவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. வாக்காளர்களுக்கு நூதன முறையில் பணம் அளித்ததாக அவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com