ஆளுநர் வாகனத்தை முந்திச்சென்ற 7 பேர் மீது வழக்கு

ஆளுநர் வாகனத்தை முந்திச்சென்ற 7 பேர் மீது வழக்கு
ஆளுநர் வாகனத்தை முந்திச்சென்ற 7 பேர் மீது வழக்கு

கோட்டூர்புரத்தில் போக்குவரத்து விதிகளை மீறி ஆளுநர் வாகனத்தை முந்திச் சென்றதாக ஏழு பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. 

சென்னையில் உள்ள கோட்டூர்புரம் பட்டேல் சாலையில் நேற்றிரவு ஆளுநர் பன்வாரிலால் புரோகித்தின் வாகனம் சென்று கொண்டிருந்தது. அப்போது 4 இருக்கர வாகனங்களில் வந்த 7 பேர் போக்குவரத்து விதிகளை மீறி ஆளுநரின் வாகனத்தை முந்திச் சென்றதாகக் கூறப்படுகிறது. இதுகுறித்து அடையாறு போக்குவரத்து புலனாய்வுப்பிரிவு காவல்துறையினர் விசாரணை நடத்தினர். 

அதில் ஆளுநர் வாகனத்தை முந்திச் சென்றவர்களில் இருவர் அண்ணாப் பல்கலைக்கழக மாணவர்கள் என்பதும், 2 பேர் தனியார் கல்லூரி மாணவர்கள் என்பதும், மற்ற 3 பேர் தனியார் நிறுவன ஊழியர்கள் என்றும் தெரியவந்தது. அவர்கள் மீது 4 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com