தமிழ்நாடு
சூர்யாவுக்கு ஆதரவாக ஆர்ப்பாட்டம் நடத்திய பழங்குடி கூட்டமைப்பினர் மீது வழக்குப்பதிவு
சூர்யாவுக்கு ஆதரவாக ஆர்ப்பாட்டம் நடத்திய பழங்குடி கூட்டமைப்பினர் மீது வழக்குப்பதிவு
நடிகர் சூர்யா மற்றும் ஜெய்பீம் படத்திற்கு ஆதரவு தெரிவித்து மதுரை ஆட்சியர் அலுவலகத்தில் ஆர்ப்பாட்டம் நடத்திய தமிழ்நாடு பழங்குடி நாடோடிகள் கூட்டமைப்பை சேர்ந்தவர்கள் மீது காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
நடிகர் சூர்யா நடிப்பில் அண்மையில் வெளியான ’ஜெய் பீம்’ படத்துக்கு ஆதரவும், எதிர்ப்பும் கிளம்பி உள்ளன. இந்நிலையில் சூர்யாவுக்கு ஆதரவாக நேற்று மதுரையில் பழங்குடி மக்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அவர்கள் கைகளில் பாம்புகள், எலிகள் மற்றும் பூம்பூம் மாட்டுடன் வந்து சூர்யாவுக்கும், அவர் நடித்த ’ஜெய் பீம்’ படத்துக்கும் ஆதரவாக கோஷமிட்டனர்.
இந்த நிலையில் நடிகர் சூர்யா மற்றும் 'ஜெய்பீம்' திரைப்படத்திற்கு ஆதரவு தெரிவித்து மதுரை ஆட்சியர் அலுவலகத்தில் பாம்புகள், எலிகளோடு ஆர்ப்பாட்டம் நடத்திய தமிழ்நாடு பழங்குடி நாடோடிகள் கூட்டமைப்பை சேர்ந்த 51 பேர் மீது தல்லாகுளம் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.