அண்ணாமலை உள்ளிட்ட பாஜகவினர் 5 பேர் மீது வழக்குப் பதிவு !
பாஜகவில் அண்மையில் இணைந்த முன்னாள் ஐபிஎஸ் அதிகாரி அண்ணாமலை உள்ளிட்ட 5 பேர் மீது காட்டூர் காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
முன்னாள் ஐ.பி.எஸ் அதிகாரி அண்ணாமலை பாஜகவில் இணைந்துள்ளார். இதையடுத்து, அவர் கோவை பி.ஜே.பி அலுவலகத்துக்கு வருகை தந்தார். கோவை வந்த அண்ணாமலைக்கு மேள தாளங்களுடன், பட்டாசுகள் வெடித்து உற்சாகமாக வரவேற்பு அளிக்கப்பட்டது. ஊரடங்கு உத்தரவு அமலில் இருக்கும் நிலையில், ஏராளமான பாஜக நிர்வாகிகள் சித்தாப்புதூர் வி.கே.மேனன் சாலையிலுள்ள பி.ஜே.பி அலுவலகம் முன்பு கூடினர்.
அப்போது தனிமனித இடைவெளி கடைப்பிடிக்கவில்லை என கூறப்படுகிறது. மேலும் ஊரடங்கு காலம் வழிமுறைகளும் பின்பற்றவில்லை என குற்றச்சாட்டு எழுந்தது. இந்நிலையி்ல பெருந்தொற்று காலத்தில் தனிநபர் இடைவெளியை பின்பற்றவில்லை உட்பட கொரோனா தடுப்பு பிரிவுகளின் கீழ் முன்னாள் ஐபிஎஸ் அண்ணாமலை உள்ளிட்ட 5 பேர் மீது கோவை மாவட்டம் காட்டூர் காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
மாநில பொருளாளர் எஸ் ஆர் சேகர் , மாநில இணைசெயலாளர் கனகசபாபதி , மாநில பொதுச்செயலாளர் ஜி கே செல்வகுமார் , மாவட்ட தலைவர் நந்தகுமார் என ஐந்து பேர் மீது ஐந்து பிரிவுகளில் கொரோனா ஊரடங்கு விதிகளை மீறி ஒன்று கூடுதல்,நோய் பரப்பும் விதமாக செயல்பட்டது உடபட ஐந்து பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்துள்ளனர் காவல்துறையினர்.