தேசிய நெடுஞ்சாலையில் ஸ்கேட்டிங் பயிற்சி
தேசிய நெடுஞ்சாலையில் ஸ்கேட்டிங் பயிற்சிpt web

தேசிய நெடுஞ்சாலையில் ஸ்கேட்டிங்; பயிற்சி பள்ளி உரிமையாளர் மீது வழக்கு

சேலத்தில் ஆபத்தான முறையில் சிறுவர், சிறுமிகள் ஸ்கேட்டிங் பயிற்சி மேற்கொண்டது சர்ச்சையை ஏற்படுத்தியது. இந்நிலையில் பயிற்சி பள்ளி உரிமையாளர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
Published on

சேலம் மாவட்டம், சீலநாயக்கன்பட்டியில் இருந்து மல்லூர் செல்லும் தேசிய நெடுஞ்சாலையில் சிறுவர், சிறுமிகள் ஸ்கேட்டிங் சென்றனர். லாரிகள், கார்கள் போன்ற வாகனங்களுக்கு இடையே, சிறார்கள் சறுக்கிச்சென்றதை கண்டு அருகிலிருந்தவர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.

உரிய அனுமதி பெறாமல் தேசிய நெடுஞ்சாலையில் சிறுவர் சிறுமிகள் ஸ்கேட்டிங் சென்றது தெரியவந்தது. கனரக வாகனங்கள் அதிகம் செல்லும் சாலையில் இதுபோன்று சிறுவர் சிறுமிகள் ஸ்கேட்டிங் சென்றது சர்ச்சையை ஏற்படுத்தியது.

தேசிய நெடுஞ்சாலையில் ஸ்கேட்டிங் பயிற்சி
”கை உள்ள போற அளவு கொம்பு குத்தி கிழிச்சிருந்தது” பெண்ணை மாடு தாக்கிய நிகழ்வு; பதறவைக்கும் காட்சி

இந்நிலையில், சிறுவர்களை ஸ்கேட்டிங்கில் ஈடுபடுத்தியது தொடர்பாக பயிற்சி பள்ளி உரிமையாளர் மீது 4 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com