நடிகர் விஜய் மீது புகார்! வாக்களிக்க சென்றபோது விதிகளை மீறியதாகக் குற்றச்சாட்டு

தமிழக வெற்றிக்கழகத்தின் தலைவர் விஜய் மீது காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
நடிகர் விஜய்
நடிகர் விஜய்முகநூல்

தமிழக வெற்றிக்கழகத்தின் தலைவர் விஜய் மீது காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

18 ஆவது நாடாளுமன்ற தேர்தல் தமிழகத்தில் ஏப்ரல் 19 ஆம் தேதி நடைப்பெற்றது.இதில், தமிழக வெற்றிக்கழகத்தின் தலைவராகவும் ஒரு அரசியல்வாதியாகவும் நடிகர் விஜய் தனது வாக்கினை நீலாங்கரையில் உள்ள பள்ளியில் அமைந்துள்ள வாக்குச்சாவடி மையத்தில் வாக்கினை செலுத்தியுள்ளார்.

தனது ஜனநாயக கடமையை செய்ய வேண்டும் என்பதற்காக, ரஷ்யாவில் படப்பிடிப்பில் இருந்த விஜய் தனி விமானத்தின் மூலமாக தேர்தல் நாளன்று காலையில் சென்னை வந்தடைந்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில், வாக்களிக்க வந்த விஜய் கூட்டத்தை ஏற்படுத்தி மக்களுக்கு இடையூறு விளைவித்தார் என காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. சென்னை கொருக்குப்பேட்டையை சேர்ந்த சமூக ஆர்வலரான ஆர்.டி.ஐ செல்வம் என்பவர், சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் இதுகுறித்து ஆன்லைன் வாயிலாக புகார் ஒன்றை அளித்துள்ளார்.

அப்புகாரில், ”மக்களவை தேர்தலுக்காக நீலாங்கரையில் உள்ள வாக்குச்சாவடிக்கு வாக்களிக்க சென்றபோது, 200க்கும் மேற்பட்டோருடன் உள்ளே நுழைந்து, நடிகர் விஜய் பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தியுள்ளார். மேலும், வாக்காளர்களின் வரிசையில் நிற்காமல் காவல்துறையினர் உதவியோடு தனது வாக்கை அவர் செலுத்திவிட்டு சென்றார்.” என்று புகாரில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நடிகர் விஜய்
தமிழக வெற்றிக் கழக தலைவராக முதல் ஓட்டு; கையில் காயமா? சோர்வாக காணப்பட்ட விஜய்! முழு விவரம்

இந்நிலையில், தேர்தல் விதிமுறைகளை மீறி செயல்பட்ட நடிகர் விஜய் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com