காவல் நிலையத்தில் துப்பாக்கியுடன் நின்ற படத்தை சமூக வலைதளத்தில் பதிவிட்ட நபர் மீது வழக்கு

காவல் நிலையத்தில் துப்பாக்கியுடன் நின்ற படத்தை சமூக வலைதளத்தில் பதிவிட்ட நபர் மீது வழக்கு

காவல் நிலையத்தில் துப்பாக்கியுடன் நின்ற படத்தை சமூக வலைதளத்தில் பதிவிட்ட நபர் மீது வழக்கு
Published on

காவல் நிலையத்தில் துப்பாக்கியுடன் நின்று புகைப்படம் எடுத்து, ஃபேஸ்புக்கில் பதிவிட்ட நபர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

ஈரோடு மாவட்டம் அந்தியூர் அருகே உள்ள தவிட்டுப்பாளையம் பகுதியைச் சேர்ந்த கோவிந்தராஜ் என்பவர் கடந்த 2ஆம் தேதி காவல் நிலையத்துக்குள் துப்பாக்கியுடன் நின்று எடுத்த புகைப்படத்தை சமூக வலைதளங்களில் பதிவிட்டு இருந்தது பரபரப்பை ஏற்படுத்தியது,

இதனையடுத்து இது குறித்து விசாரணை நடத்திய அந்தியூர் போலீசார், தற்போது தேர்தல் சமயம் என்பதால் உரிமம் பெற்று துப்பாக்கி வைத்திருக்கும் நபர்கள் தங்களது துப்பாக்கிகளை காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர்.

இந்நிலையில், துப்பாக்கி உரிமம் பெற்ற அந்தியூரைச் சேர்ந்த ஸ்ரீதர் என்பவர் தனது இரட்டை குழல் துப்பாக்கியை காவல் நிலையத்தில் ஒப்படைக்க வந்தார். அப்போது காவல் நிலையத்திற்குள் நின்றிருந்த கோவிந்தராஜ், அந்தத் துப்பாக்கியை வாங்கி நின்றபடி புகைப்படம் எடுத்தது சமூக வலைதளங்களில் பதிவிட்டது தெரியவந்தது,

இதனையடுத்து கோவிந்தராஜ், ஸ்ரீதர் ஆகிய இருவர் மீதும் ஆயுத தடைச்சட்டத்தின் கீழ் அந்தியூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com